Leo Jupiter Transit Horoscope,சிம்ம ராசியில் குரு பெயர்ச்சி 2026: எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டிய ராசிகள் – jupiter transit into leo 2026: zodiac signs that should proceed with caution

குரு பகவான் அக்டோபர் 31 முதல் அடுத்து 84 நாட்கள் தன்னுடைய அதிசாரம் மற்றும் வக்ர பெயர்ச்சி காரணமாக கடக ராசியில் இருந்து நகர்ந்து சிம்ம ராசியில் சஞ்சாரம் செய்ய உள்ளார். சில ராசிகளுக்கு குருவின் பார்வை கிடைக்காமல் போகும் மற்றும் அவருடைய அமைப்பு சாதனை மற்ற பலன்களை தர வாய்ப்புகள் உண்டு.

குரு பகவான் அக்டோபர் 31ம் தேதி தன்னுடைய அதிசார நகர்வால் கடக ராசியில் இருந்து சிம்ம ராசியில் நுழைய உள்ளார். மேலும் அங்கு கேதுடன் இணைந்து சஞ்சாரம் செய்ய உள்ளார். இதன் காரணமாக சில ராசிகளுக்கு ஒரு சாதகமற்ற ஸ்தானத்தில் சஞ்சாரம் செய்வதும், குருவின் பார்வை பலன் கிடைக்காமல் போவதாலும், அடுத்த 84 நாட்கள் சில ராசிகளுக்கு சாதகமற்ற பலனை தரக்கூடியதாக அமையும். 2027 ஜனவரி 25ஆம் தேதி மீண்டும் கடக ராசிக்கு குரு திரும்புகிறார். அதுவரை கவனமாக இருக்க வேண்டிய ராசிகளை தெரிந்து கொள்வோம்.

ரிஷப ராசி

ரிஷப ராசி சேர்ந்தவர்களுக்கு, உங்களுக்கு சாதகமற்ற நான்காம் ஸ்தானத்தில் குருவின் நுழைவு காரணமாக, சிரமங்களை சந்திக்க நேரிடலாம். குறிப்பாக வேலைப்பளு அதிகரிப்பது, அதனால் சோர்வும், ஓய்வு எடுக்க முடியாத சூழ்நிலையும் ஏற்படலாம். நீண்ட நாட்களாக திட்டமிட்டு வந்த சொத்து வாங்கும் முயற்சிகள் சற்று தள்ளிப் போகலாம்.

பணம் சம்பாதிப்பதற்கு இது மிகவும் சாதகமானதாக இருந்தாலும், அதற்காக அதிக சிரமங்கள் சந்திக்க நேரிடலாம். மேலும் உங்களுடைய பண வரவை சரியான இடத்தில் சேமிப்பதற்கான முயற்சிகளில் ஈடுபடவும். இந்த காலத்தில் எதிர்பார்த்த பலனை பெற கடின உழைப்பு மற்றும் கவனம் தேவைப்படும்.

மிதுன ராசி

மிதுன ராசி அன்பர்களுக்கு உங்களுடைய தைரிய ஸ்தானத்தில் குருவின் நுழைவு காரணமாக எதிலும்முன்னெச்சரிக்கை நடவடிக்கை தேவைப்படும். குடும்பத்திலும், பணியிடத்திலும் சூழலை புரிந்து செயல்படுவதும், விட்டுக் கொடுத்து செல்வதும் நன்மை தரும். மேலும் உங்கள் கடின உழைப்பிற்கான மரியாதை கிடைக்கப்பெறுவீர்கள்.

உங்கள் தொழில் , வேலையை மேம்படுத்துவதற்கான பொன்னான நேரமாக இருக்கும். இருப்பினும் அதை சரியாக பயன்படுத்துவது அவசியம். சோம்பல் உங்களுக்கு தொந்தரவு தரக்கூடியதாக அமையலாம். முக்கிய முடிவுகளை எடுப்பதிலும், பிறரை நம்புவதிலும் நம்புவதிலும் அவசரப்பட வேண்டாம்.

சிம்ம ராசி

உங்களுடைய ராசியில் குருவின் நுழைவும், கேதுடன் சேர்ந்து சஞ்சாரம் செய்வதும் மகிழ்ச்சியும் செழிப்பும் தரக்கூடியதாக இருக்கும். முன்னேற்றத்திற்கான நல்ல வாய்ப்புகளும் கிடைக்கும். அதே சமயம் இந்த காலத்தில் உங்களுடைய உடல் நலனில் கூடுதல் கவனம் தேவை. சிலருக்கு வயிறு தொடர்பான தொந்தரவுகள் ஏற்படும். உடல் எடை அதிகரிக்க வாய்ப்புகள் உண்டு. சரியான உணவு எடுத்துக் கொள்வதிலும், உடற்பயிற்சி செய்வதிலும் அக்கறை காட்டவும்.
திருமண வாழ்க்கையில் இருப்பவர்கள் தேவையற்ற விஷயங்களை பேசுவதால் உறவில் விரிசல் ஏற்படலாம். நீங்கள் எவ்வளவு சம்பாதித்தாலும் தான தர்மம் போன்ற விஷயங்களில் ஈடுபடுவது அவசியம்.

மகர ராசி

மகர ராசிக்கு இதுவரையும் குருவின் அற்புத பார்வை கிடைத்து வந்தது. இந்நிலையில் அவருடைய இந்த நகர்வு சில சிரமங்களை தர வாய்ப்புகள் உண்டு. வெளியூர், வெளிநாடுகளில் இருப்பவர்கள் சிரமங்களை சந்திக்கவும் நேரிடலாம். உடல் நலனில் கூடுதல் கவனம் தேவை. நீங்கள் மேற்கொள்ளக்கூடிய அலைச்சலை ஏற்படுத்தும். உங்களுடைய வருமானம் அதிகரித்தாலும், செலவுகள் கூடுதலாக இருக்கும். கடின உழைப்பு உங்களுக்கு முன்னேற்றம் தரக்கூடியதாக அமையும்.

Source link