டில்லியில் தேஜ கூட்டணி எம்பிக்கள் ஆலோசனை; பிரதமர் மோடி, அமித்ஷா பங்கேற்பு

புதுடில்லி: டில்லியில் நடந்த தே.ஜ., கூட்டணி எம்பிக்கள் ஆலோசனை கூட்டத்தில் பிரதமர் மோடி, மத்திய அமைச்சர்கள் அமித்ஷா, ராஜ்நாத் சிங், நட்டா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

டில்லியில் பார்லிமென்ட் வளாகத்தில் பாஜ தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி எம்பிக்கள் ஆலோசனை கூட்டம் இன்று நடந்தது. ஒரு முக்கிய அரசியல் நிகழ்வாக, புதிதாக உருவாக்கப்பட்ட இந்திய தேசியவாத குடிமக்கள் கட்சியினர் முதல் முறையாக கூட்டத்தில் கலந்துகொண்டனர்.

மத்திய அமைச்சர்கள் அமித்ஷா, ராஜ்நாத் சிங், நட்டா உள்ளிட்டோரும் பங்கேற்றனர். கூட்டத்தில் பங்கேற்ற பார்லிமென்ட் விவகாரத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜூ கூறியதாவது: சட்ட வல்லுநர்களுடன் கலந்து ஆலோசித்து தேர்வு முறைகேடுகளில் ஈடுபட்டவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க பிரதமர் மோடி அழைப்பு விடுத்துள்ளார்.

மாணவர்களின் நலன்களைப் பாதுகாப்பதே அரசின் முன்னுரிமையாக தொடர்கிறது என்று மீண்டும் வலியுறுத்தினார். பல்வேறு நாடுகளுடன் சமீபத்தில் கையெழுத்திடப்பட்ட தடையற்ற வர்த்தக ஒப்பந்தங்கள் குறித்து விவாதித்த போது விவசாயிகளின் நலனில் அரசு கவனம் செலுத்துவதையும் அவர் எடுத்துரைத்தார். இவ்வாறு கிரண் ரிஜிஜூ கூறினார்.

Source link