டில்லி கவர்னர் தரன்ஜித்துக்கு அமெரிக்க அதிபர் வாழ்த்து

புதுடில்லி: டில்லி துணை நிலை கவர்னராக நியமிக்கப்பட்ட முன்னாள் வெளியுறவு அதிகாரி தரன்ஜித் சிங் சந்துவுக்கு, அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

டில்லி யூனியன் பிரதேசத்தின் துணை நிலை கவர்னராக இருந்த சக்சேனா, லடாக் கவர்னராக கடந்த மாதம் நியமிக்கப்பட்டார். இதையடுத்து, அவரது பதவிக்கு முன்னாள் வெளியுறவு அதிகாரி தரன்ஜித் சிங் சந்து நியமிக்கப்பட்டார். அவர் மார்ச் 11ம் தேதி கவர்னராக பொறுப்பேற்றார்.

இவர், கடந்த 2020 – 24 வரை அமெரிக்காவுக்கான இந்திய துாதராக பணியாற்றி உள்ளார். அமெரிக்க அதிபர் டிரம்பின் அறிமுகம் பெற்றவர்.

இந்நிலையில், அவர் டில்லி கவர்னராக பொறுப்பேற்றதற்கு அதிபர் டிரம்ப் வாழ்த்து செய்தி வெளியிட்டு உள்ளார்.

அதில் கூறியுள்ளதாவது:

டில்லியின் புதிய கவர்னராக தரன்ஜித் சிங் சந்து பொறுப்பேற்றதற்கு வாழ்த்துகள். மிகுந்த அனுபவம் மிக்க துாதர். அமெரிக்காவுக்கான துாதராக அவர் இருந்த போது, இந்தியா – அமெரிக்கா உறவை வலுப்படுத்துவதில் தீவிர அர்ப்பணிப்பை காட்டினார்.

டில்லிக்கான வளர்ச்சியை முன்னெடுப்பதிலும், உலகளாவிய உறவுகளை மேலும் விரிவுபடுத்துவதிலும் அவருக்கு வெற்றி கிடைக்க வாழ்த்துகள் .

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Source link