தங்கத்தின் விலையில் மாற்றமில்லை; சரிவைச் சந்தித்த வெள்ளி விலை

சமீப நாட்களாகத் தங்கம் மற்றும் வெள்ளியின் விற்பனை விலையில் பல்வேறு மாற்றங்கள் பதிவாகி வருகின்றன.

கடந்த சில நாட்களாக தங்கத்தின் விலை ஏற்ற இறக்கங்களைச் சந்தித்து வந்தது. அக்டோபர் 19-ஆம் தேதி சவரனுக்கு ரூ.280 உயர்ந்து ரூ.1,08,560-க்கும், கிராமுக்கு ரூ.35 உயர்ந்து ரூ.13,570-க்கும் விற்பனையானது. தொடர்ந்து அக்டோபர் 20 அன்று சவரனுக்கு ரூ.640 சரிந்து ரூ.1,07,920-ஆகவும் (கிராம் ரூ.13,490), அக்டோபர் 21 அன்று சவரனுக்கு ரூ.800 குறைந்து ரூ.1,07,120-ஆகவும் (கிராம் ரூ.13,390) வீழ்ச்சியடைந்தது.

அதன் பின், அக்டோபர் 22-ஆம் தேதி சவரனுக்கு ரூ.1,240 சரிந்து ரூ.1,05,880-க்கும் (கிராம் ரூ.13,235), அக்டோபர் 23 அன்று மீண்டும் சவரனுக்கு ரூ.1,400 குறைந்து ரூ.1,04,480-க்கும் (கிராம் ரூ.13,060) விற்பனை செய்யப்பட்டது.

இதனைத் தொடர்ந்து அக்டோபர் 24-ஆம் தேதி தங்கம் விலை மீண்டும் உயரத் தொடங்கி, சவரனுக்கு ரூ.80 உயர்ந்து ரூ.1,04,560-ஐயும் (கிராம் ரூ.13,070), அக்டோபர் 25 அன்று அதே விலையிலும் நீடித்தது. அக்டோபர் 26 அன்று சவரனுக்கு ரூ.120 அதிகரித்து ரூ.1,04,680-ஆகவும் (கிராம் ரூ.13,085), அக்டோபர் 27 அன்று சவரனுக்கு ரூ.400 உயர்ந்து ரூ.1,05,080-ஆகவும் (கிராம் ரூ.13,135) விற்பனையானது. அக்டோபர் 28 அன்று மேலும் சவரனுக்கு ரூ.480 உயர்ந்து ரூ.1,05,560-ஐ (கிராம் ரூ.13,195) எட்டியது.

தொடர்ந்து விலை உயரும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இன்றைய நாளில் தங்கத்தின் விலையில் எவ்வித மாற்றமும் இன்றி, ஒரு சவரன் (22 காரட்) ரூ.1,05,560-க்கும், ஒரு கிராம் ரூ.13,195-க்கும் விற்பனையாகி வருகிறது.

கடைசி 5 நாள் தங்கத்தின் விலை (சவரன் – 22 காரட்):   

28-10-2026: ரூ.1,05,560   
27-10-2026: ரூ.1,05,080   
26-10-2026: ரூ.1,04,680  
25-10-2026: ரூ.1,04,560   
24-10-2026: ரூ.1,04,560

வெள்ளி விலை நிலவரம்

கடந்த நான்கு நாட்களாக எந்தவித மாற்றமும் இன்றி ஒரு கிராம் ரூ.220 என்ற ஒரே விலையில் விற்பனையாகி வந்த வெள்ளியின் விலை, இன்று சற்று குறைந்துள்ளது. கிராமுக்கு ரூ.5 சரிவடைந்து, தற்போது ஒரு கிராம் வெள்ளி ரூ.215-க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ.2.15 லட்சத்திற்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

கடைசி 5 நாள் வெள்ளியின் விலை (கிராம்):   

28-10-2026: ரூ.220   
27-10-2026: ரூ.220   
26-10-2026: ரூ.220   
25-10-2026: ரூ.220   
24-10-2026: ரூ.220

Source link