தங்கையைப் பள்ளிக்கு அழைத்துச் சென்ற அண்ணனுக்கு நேர்ந்த சோகம்!

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகில் உள்ள எரிச்சி கிராமத்தைச் சேர்ந்தவர் கோபால் மகன் வீரபாண்டியன்(18). இவர், பாலிடெக்னிக் படித்துவிட்டு வேலைக்குச் செல்ல தயாராகிக் கொண்டிருந்தார். நேற்று எரிச்சியில் நடந்த திருவிழாவிற்கு வீரபாண்டியனின் சித்தப்பா சிட்டங்காடு கிராமத்தைச் சேர்ந்த ரவிச்சந்திரன் மகள் அகல்யா(13) (சிலட்டூரில் அரசுப் பள்ளியில் 8 ம் வகுப்பு) வந்துள்ளார்.

திருவிழா முடிந்த நிலையில் இன்று காலை பள்ளிக்குச் செல்ல வேண்டும் என்பதால் வீரபாண்டியன் தங்கை அகல்யாவை ஒரு பைக்கிள் ஏற்றிக் கொண்டு சென்ற போது எதிரே வந்த பழைய இரும்பு வாங்க வந்த வாகனம் மோதியதில் விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் காயமடைந்த விரபாண்டியன் மற்றும் அகல்யாவை அக்கம் பக்கத்தினர் மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

அங்கு இருவரையும் பரிசோதனை செய்த மருத்துவர்கள் வீரபாண்டியன் உயிரிழந்தாக கூறியுள்ளனர். அகல்யா கால் முறிந்த நிலையில் முதலுதவி சிகிச்சை அளித்து மேல் சிகிச்சைக்காக மதுரை தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். தங்கையை பள்ளிக்கு அழைத்துச் சென்ற அண்ணனுக்கு நேர்ந்த துயரத்தை பார்த்து கிராமமே சோகத்தில் ஆழ்ந்துள்ளது. சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்த அறந்தாங்கி போலீசார் சரக்கு வாகன ஓட்டுநரை கைது செய்து விசாரனை செய்து வருகின்றனர்.

Source link