தசரா விழாவில் பங்கேற்கும் பிரதமர் மோடி; உச்சக்கட்ட பாதுகாப்பில் தலைநகர் டில்லி

புதுடில்லி: டில்லியில் இன்று நடைபெறும் தசரா கொண்டாட்டங்களில் பிரதமர் மோடி பங்கேற்கிறார். அவரின் வருகையை முன்னிட்டு, போக்குவரத்து கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு உள்ளன.

கிழக்கு டில்லியில் ராம்லீலா கமிட்டி சார்பில் தசரா கொண்டாட்டங்களுக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன. இந்த விழாவில் பிரதமர் மோடி கலந்து கொள்கிறார். அவரின் வருகை அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தப்பட்டு, அறிவிக்கப்பட்டுள்ளது.

விழாவில் 10,000 பேர் கலந்து கொள்கின்றனர்.அதிகாரப்பூர்வ அனுமதிசீட்டு பெற்றவர்கள் மட்டுமே விழாவில் கலந்து கொள்ள அனுமதிக்கப்படுகின்றனர்.

தசராவை முன்னிட்டு, டில்லியில் போக்குவரத்து கட்டுப்பாடுகளை போலீசார் நடைமுறைப்படுத்தி உள்ளனர். மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை இந்த கட்டுப்பாடுகள் அமலில் இருக்கும்.

2500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். மத்திய துணை ராணுவப் படையினரும் ரோந்து பணியில் இறங்கி இருக்கின்றனர்.

Source link