‘தஞ்சாவூரு மண்ணு எடுத்து…’ – தேவாவின் ஆஸ்தான பாடகர் காலமானார்!

பிரபல பாடகர் கிருஷ்ணராஜ்(75) உடல்நலக் குறைவால் காலமாகியுள்ளார். தமிழில் 300க்கும் மேற்பட்ட பாடல்களை பாடியுள்ளார். அண்மையில் மறைந்த தேவாவின் இசையில் பல பாடல்களை பாடியுள்ளார். அவரது ஆஸ்தான பாடகராகவும் இருந்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 

தேவாவின் இசையில் ‘தஞ்சாவூரு மண்ணு எடுத்து…’, ‘பாட்டுக்கு பாலைவனம் பூ பூக்கும்’, ‘மீசக்கார நண்பா(சோகம்)’ உள்ளிட்ட பல்வேறு பாடல்களை பாடியுள்ளார். குறிப்பாக காதல் கோட்டை படத்தில் ‘வெள்ளரிக்கா வெள்ளரிக்கா’ பாடல் கிருஷ்ணராஜின் திரை வாழ்க்கையில் ஒரு முக்கிய பாடலாக அமைந்தது.  இதையடுத்து தாஜ்மஹால் படத்தில் ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் ‘ஈச்சி எலுமிச்சி’, பருத்திவீரன் படத்தில் யுவன் ஷங்கர் ராஜா இசையில் ‘ஐயய்யோ’ உள்ளிட்ட ஹிட் பாடல்களையும் பாடியுள்ளார். கடைசியாக சூரரைப் போற்று படத்தில் ‘நாலு நிமிஷம்’ பாடலை பாடியிருந்தார்.  

சேலத்தை பூர்விகமாகக் கொண்ட இவர் சென்னை வளசரவாக்கத்தில் வசித்து வந்த நிலையில் கடந்த ஓராண்டுக்கு மேல் உடல்நலக்குறைவால் சிகிச்சை பெற்று வந்தார். ஆனால் இன்று காலை சிகிச்சை பலனின்ரி உயிரிழந்தர். இவரது மறைவு இசைத் துறையில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.