தடை செய்த பொருட்களை 'பார்'களில் விற்க கூடாது

சென்னை: தமிழக அரசின் டாஸ்மாக் நிறுவனம், சில்லரை கடைகள் வாயிலாக, மதுபானங்களை விற்கிறது.

கடைகளை ஒட்டிய காலியிடத்தில், குளிர்பானம், தின்பண்டம் விற்கும் மதுக்கூடத்தை நடத்த, தனியாருக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இது குறித்து, டாஸ்மாக் அதிகாரி ஒருவர் கூறுகையில், ‘தின்பண்டம் தவிர, மதுக்கூடத்திற்குள் தனியே மதுபானம் விற்பதோ, இருப்பு வைப்பதோ கூடாது. மது விற்பது கண்டுபிடிக்கப்பட்டால், ஒப்பந்தம் ரத்து செய்யப்படும்.

‘மதுக்கூடத்தில் அரசு தடை செய்யப்பட்ட பொருட்களை விற்கக் கூடாது; பீடி, சிகரெட் போன்றவை விற்கக் கூடாது என, உத்தரவிடப்பட்டுள்ளது’ என்றார்.

Source link