தனிப்பிரிவு போலீசார் 14 பேர் மாற்றம் – மேலும் பலரை மாற்ற ஆயத்தம்!

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள காவல் நிலையங்களில் நடக்கும் தனித் தகவல்களை அறிய மாவட்ட காவல் கண்காணிப்பாளரின் தனிப்பிரிவு செயல்பட்டு வருகிறது. இதில் பல வருடங்களாக ஒரே காவல் நிலையத்தில் பணியில் உள்ளவர்களில் முதல் கட்டமாக 12 பேரை வெவ்வேறு காவல் நிலையங்களுக்கு இடமாற்றமும் 2 பேரை பணிவிடுவிப்பும் செய்துள்ளனர். இதே போல அடுத்தகட்டமாக மற்ற காவல் நிலையங்களில் பணியில் உள்ள தனிப்பிரிவு போலீசார் விரைவில் மாற்றப்பட உள்ளதாக போலீசார் தெரிவிக்கின்றனர் என்கின்றனர் போலீசார்.

மேலும், தனிப்பிரிவில் பணியில் உள்ளவர்கள் தகவல்களை மாவட்ட காவல் கண்காணிப்பாளருக்கு தெரிவிப்பது வழக்கமாக உள்ளது. ஆனால் சமீபகாலமாக குற்றச் செயல்களில் ஈடுபடுவோரை தனிப்பிரிவு போலீசாரே நேரடியாக பிடிக்க வேண்டும் என்ற உத்தரவு இருந்து வருகிறது. இதனால் பல தனிப்பிரிவு போலீசார் குற்றப்பின்னனி உள்ளவர்களால் பாதிக்கப்பட்டு மேலும் அந்தப் பணியை தொடர விருப்பம் இல்லாமல் மீண்டும் காவல் நிலையங்களில் சீருடைப் பணிக்கே செல்லவும் விருப்பம் தெரிவித்துள்ளனர் என்றும் கூறப்படுகிறது.