தனியார் பள்ளிகளிடம் ரூபாய். 100 கோடி லஞ்சம் பெற்ற வழக்கில் முன்ஜாமீன் மனு தள்ளுபடி: கைது செய்யப்படுவாரா அன்பில் மகேஷ்? – high court denies anticipatory bail to former minister anbil mahesh connection with 100 crore school recognition scam

தமிழகத்தில் கடந்த 2021- 2026 ஆம் ஆண்டு திமுக ஆட்சிக் காலத்தில், தனியார் பள்ளிகளுக்கு நிரந்தர அங்கீகாரம் வழங்குதல், பள்ளிகளின் தரத்தை உயர்த்துதல் மற்றும் டிடிசிபி (DTCP) போன்ற அரசின் பல்வேறு அனுமதிகளைப் பெற்றுத் தருவதாகக் கூறி பல கோடி ரூபாய் வசூலித்து மோசடி செய்யப்பட்டதில் முன்னாள் அமைச்சை அன்பில் மகேஷ் வீட்டில் சோதனை நடைபெற்றது.

அன்பில் மகேஷ் மீது கைது நடவடிக்கை?

இதுகுறித்து வழக்கு விசாரணையில் அன்பில் மகேஷ் முன் ஜாமின் மனு தாக்கள் செய்யத நிலையில், இன்று அவரது முன் ஜாமின்மனுவை சென்னை உயர்நீதி மன்றம் தள்ளளுபடு செய்து உத்திவிட்டது. இதனால் 100 கோடி லஞ்சம் புகார் வழக்கில் முன்னாள் அமைச்சர் கைது செய்யப்படலாம் என கூறப்படுகிறது.

அன்பில் மகேஸ் வீடுகளில் சோதனை

இந்த மோசடி விவகாரத்தில் முன்னாள் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் மீது ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதன் தொடர்ச்சியாக, சென்னை தி.நகர், திருச்சி தென்னூர் மற்றும் அண்ணா நகரில் உள்ள அவரது இல்லங்கள் உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் சுமார் 8 மணி நேரத்திற்கு மேலாக அதிரடி சோதனை நடத்தினர்.

இந்தச் சோதனையின் போது, சொத்து ஆவணங்கள், வங்கிச் கணக்கு விவரங்கள் மற்றும் காசோலைகள் உள்ளிட்ட 118 முக்கிய ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. மேலும் 18 செல்போன்கள், 3 லேப்டாப்கள், 8 பென்டிரைவ்கள், 2 ஹார்டு டிஸ்க்குகள், 1 டேப்லெட் மற்றும் 1 ஆப்பிள் ஐபேட் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

நேரில் ஆஜராக உத்தரவு

வீடுகளில் நடத்தப்பட்ட சோதனையைத் தொடர்ந்து, வழக்கு தொடர்பாக நேரில் விளக்கமளிக்குமாறு அன்பில் மகேஸுக்குச் சம்மன் அனுப்பப்பட்டது. அதன்படி, சென்னை வேப்பேரியில் உள்ள மாநகரக் காவல் ஆணையர் அலுவலகத்தில் அன்பில் மகேஸ் நேரில் ஆஜராககி விசாரணை கேள்விகளுக்கு பதில் அளித்தார்.

Source link