சென்னையில் ‘சத்குருவின் குரல் – மாதந்தோறும் சந்திப்போம்… சிந்திப்போம்’ நிகழ்ச்சி தொடக்கம்..!

சத்குருவின் ஆதியோகி சிவன் புத்தகம், ஒரு புத்தகம் என்று கூற முடியாது. இது ஒரு வழிமுறை. இந்தப் புத்தகம் ஆதியோகியின் வரலாறு அல்ல, அந்த ஆதியோகி சிவனை உள்வாங்கிக் கொள்ளும் வழிமுறையாக இந்தப் புத்தகம் இருக்கிறது.

சிவனே யோகத்தின் மூலம், அவனே அதன் இலக்கு மற்றும் அவன்தான் அந்த யோகமே என்பதை சத்குரு இந்தப் புத்தகத்தில் விளக்குகிறார்.

சிவனை ‘ஒன்றுமற்ற ஒன்று’ என்று சத்குரு கூறுகிறார். அதாவது பூரணமாக இருக்கும் ஒன்றாகவும் சூனியமாக இருக்கும் ஒன்றுமற்றதாகவும் சிவன் இருக்கிறார் என்பதை சத்குரு விளக்கியுள்ளார்.” எனப் பேசினார்.

முன்னதாக பேசிய ஈஷா ஒருங்கிணைப்பாளர் விஜயகுமார் பேசுகையில், “இன்று தொடங்கி இருக்கும் ‘சத்குருவின் குரல்’ நிகழ்ச்சி மாதந்தோறும் நடைபெற உள்ளது. இதில் புகழ்பெற்ற தமிழ் அறிஞர்கள் மற்றும் ஆன்மீகப் பேச்சாளர்கள் கலந்துகொண்டு சத்குருவின் நூல்கள் மற்றும் கருத்துக்கள் குறித்து உரையாற்ற உள்ளனர். இந்த நிகழ்ச்சி அடுத்த 12 மாதங்களுக்கு சென்னை பாரதிய வித்யா பவனில் நடைபெற உள்ளது. இதற்கு காரணமாக இருக்கும் ஶ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸ் முரளி மற்றும் பாரதிய வித்யா பவன் சாமிநாதன் உள்ளிட்டோருக்கு நன்றி” எனக் கூறினார்.

“ஆதியோகி சிவன் – யோகத்தின் மூலம்” என்ற புத்தகம், முதல் யோகியான ஆதியோகி மனிதகுலத்திற்கு வழங்கிய யோக அறிவியலின் ஆழம் மற்றும் பல்வேறு பரிமாணங்கள் குறித்த விரிவான தகவல்களை வாசகர்களுக்குத் தரும் வகையில் வடிவமைக்கப்பட்டு உள்ளது.

மேலும் மனிதர்கள் தங்கள் வரம்புகளைக் கடந்து வாழ்வின் உச்சபட்ச சாத்தியங்களை எட்டுவதற்கு ஆதியோகி வழங்கிய 112 வழிமுறைகளையும், தன்னுள் நிகழும் மாற்றத்தின் மூலமாக நல்வாழ்வை எப்படி அடைவது என்பதையும் மிகவும் எளிமையான நடையில் விளக்குகிறது.

இந்த விழாவில் ஈஷா தன்னார்வலர்கள் மற்றும் பொதுமக்கள் மிகுந்த ஆர்வமுடன் கலந்துகொண்டனர்.

Source link