”தனுஷ் அதிமுகவின் தளபதியாக இருப்பார்?”; முன்னாள் அமைச்சர் சூசகம்

பிரபல நடிகர் தனுஷ் தனது ரசிகர் மன்றத்தை நற்பணி மன்றமாக சமீபத்தில் மாற்றினார். இதனைத் தொடர்ந்து அவர் அரசியல் கட்சி தொடங்கப் போவதாகப் பல்வேறு செய்திகள் வெளிவந்த வண்ணம் உள்ளன. இதனிடையே, சமீபத்தில் டெல்லி சென்ற அவர், தேர்தல் ஆணையத்தில் கட்சியைப் பதிவு செய்ய இருப்பதாகவும் கூறப்பட்டது. அதே நேரத்தில், தனுஷ் அதிமுகவில் இணையலாம் அல்லது தனிக் கட்சி ஆரம்பித்தால் அதிமுகவுடன் கூட்டணி அமைக்கலாம் எனப் பலரும் ஆர்வம் தெரிவித்து வந்தனர்.

இந்நிலையில், அதிமுக மூத்த தலைவரும், முன்னாள் அமைச்சருமான ராஜேந்திரபாலாஜி, தனுஷின் அரசியல் நிலைப்பாடு குறித்து பேசியுள்ளார். இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், ”எடப்பாடி பழனிசாமியின் தலைமையை ஏற்று நடிகர் தனுஷ் அதிமுகவில் இணைந்தால், அவரை இருகரம் கூப்பி வரவேற்போம். அதிமுகவுக்குச் சரியான தளபதியாக நடிகர் தனுஷ் இருப்பார்” என்று தெரிவித்தார். தொடர்ந்து பேசிய அவர், ”நடிகர் தனுஷிற்கு தமிழ்நாடு முழுவதும் ஏராளமான ரசிகர்கள் இருக்கிறார்கள். அவருக்குப் பெரும்பான்மையான இளைஞர்களின் ஆதரவு உள்ளது” என்று குறிப்பிட்டார். இது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தனுஷ், அரசியலுக்கு நிச்சயமாக வருகிறார் என்பதையும், அதிமுகவில் நிச்சயம் இணைவார் என்பதையும் அவர் உறுதியாகக் கூறவில்லை. ஆனாலும், தனுஷ் அதிமுகவிற்கு வந்தால் அவரை நிச்சயம் வரவேற்போம் என்பதை மட்டும் தெளிவாகக் கூறியுள்ளார்.