“தனுஷ் பின்னால் பா.ஜ.க இருந்தால் என்ன தப்பு?” – புயலைக் கிளப்பிய திண்டுக்கல் சீனிவாசன்!

அதிமுக முன்னாள் அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், செல்லூர் ராஜு, ஆர்.பி.உதயகுமார் இன்று (26-10-26) செய்தியாளர்களைச் சந்தித்டுப் பேசினர். அதில் குறிப்பாக பேசிய திண்டுக்கல் சீனிவாசன், “செஞ்சி சிறுமி காணாமல் போன வழக்கில் காவல்துறை செயல்படவில்லை. அவர்கள் இன்னும் தேடிக் கொண்டே இருக்கிறார்கள். இந்த ஆட்சியில் யாருக்குமே பயம் இல்லை. முதலமைச்சர் கண்டிப்பாக இருந்தால் பயம் இருக்கும். ஆனால் அவரே வாய் திறக்காமல் அமைதியாக தான் இருக்கிறார். இந்த ஆட்சியில் கொலைகள், கொள்ளைகள், பாலியல் வன்கொடுமைகள், லஞ்சம் அத்தனையும் அதிகமாக நடக்கிறது. எல்லா ஆட்சியிலும் தவறு நடக்கிறது, ஆனால் இந்த ஆட்சியில் அதிகமாக இருக்கிறது. அரசாங்கத்தின் கைகளில் காவல்துறை இல்லை.

திமுக இதுவரைக்கும் 25 வருடம் ஆண்டிருக்கிறது, அதிமுக 31 வருடம் ஆண்டிருக்கிறது. திமுகவும் அதிமுகவும் சிறப்பான ஆட்சியை கொடுத்திருக்கிறோம். இப்போது புதிதாக வந்தவருடைய ஆட்சியில் எல்லாமே விலை ஏறி போச்சு” என்று கூறினார். இதையடுத்து நடிகர் தனுஷ் அரசியலுக்கு வருவதை பார்த்து ஆளுங்கட்சி பதட்டமாக இருக்கிறது என விமர்சனம் வருகிறதே என செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு அவர், “அது தான் உண்மை. ஆளுங்கட்சி பதற்றம் அடைந்திருக்கிறார்கள். ஒரு நடிகர் நாம் வந்தோம் மக்கள் நம்மை முதலமைச்சர் ஆக்கிவிட்டார்கள். இப்போது 5 மாதத்துடன் நம் வாழ்க்கை போய்விட்டதே என பயப்படுவது உண்மை தான்.

தவெகவுக்கு சென்றவர்கள் யாருக்குமே மரியாதை இல்லை. சொத்தை காப்பாற்ற நினைப்பவர்கள், ஜெயிலுக்கு போக கூடாது என நினைப்பவர்கள் தான் தவெகவுக்குச் செல்கிறார்கள். தனுஷ் பின்னாடி பா.ஜ.க இருந்தால் என்ன தப்பு? அது ஒன்னும் தப்பு இல்லையே. அது அவருடைய இஷ்டம். அவர் எந்த கட்சிக்கு பின்னால் இருக்கிறார், முன்னால் இருக்கிறார் என்பதை நீங்கள் எப்படி முடிவு செய்யலாம். பா.ஜ.கவின் தூண்டுதலில் தான் தனுஷ் கட்சி ஆரம்பிக்க போகிறார் என அமைச்சர் சொல்கிறார். இருந்தால் என்ன தப்பு? இந்தியாவிலேயே பா.ஜ.க பெரிய கட்சி. தொடர்ந்து 25 வருடம் அரசு பதவியில் இருக்கிறார் மோடி. உலகத்தினுடைய தலைவராக பிரதமர் இருக்கிரார். அந்த கட்சியில் தனுஷ் பேசினால் என்ன தப்பு? பேசினாரா எனத் தெரியவில்லை, பேசினாலும் தப்பு இல்லை” எனத் தெரிவித்தார்.