தனுஷ் பிறந்தநாளுக்கு ‘ஓம்’ படக்குழுவின் விருந்து!

ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் உருவாகி வரும் படம் ‘ஓம்’. தனுஷின் 55வது படமாக உருவாகி வரும் இப்படத்தை தனுஷின் வுண்டர்பார் பிலிம்ஸ் நிறுவனமும் ஆர் டேக் ஸ்டுடியோஸ் என்ற நிறுவனமும் இணைந்து தயாரிக்கிறது. இப்படத்தில் நடிகைகள் சாய் பல்லவி, ஸ்ரீ லீலா மற்றும் மம்மூட்டி ஆகியோர் நடிக்கின்றனர். இவர்களுடன் பாலிவுட் நடிகர் நசீருதீன் ஷாவும் இணைந்து நடிக்கின்றார். படத்திற்கு சாய் அபயங்கர் இசையமைக்கிறார். அக்டோபர் 16ஆம் தேதி படம் வெளியாகிறது.   

கடந்த மாதம் வெளியான ஃபர்ஸ்ட் லு போஸ்டர் மற்றும் அதன் கிளிம்ஸ் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றது. அந்த கிளிம்ஸில் திருவண்ணாமலைக்கு அருகே மரம் வெட்டும் தொழிலாளர்கள் 10-க்கும் மேற்பட்டவர்களை காவல் துறையினர் என்கவுண்டர் செய்வது போலவும் அவர்களை தனுஷ் வந்து காப்பாற்றுவது போலவும் காட்சிகள் இடம் பெற்றிருந்தது. இப்படம் நிறைய உண்மை சம்பவங்களின் அடிப்படையில் புனையப்பட்ட ஒரு கதை என இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி கூறியிருந்தார். 

இந்த நிலையில் இப்படத்தின் முதல் பாடல் குறித்த அப்டேட் வெளியாகியுள்ளது. அதன்படி நாளை(28.07.2026) தனுஷ் பிறந்தநாளையொட்டி ‘அலாகா லோவா( Alaakaa Loova)’ எனும் தலைப்பில் சாய் அபயங்கர் இசையில் வெளியாகிறது. அதன் புரோமோவும் தற்போது வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. ஒரு குத்து பாடலாக இப்பாடல் அமைந்துள்ளதால் தனுஷ் ரசிகர்களுக்கு பிறந்தநாளன்று விருந்தாக அமையும் என படக்குழு தெரிவித்துள்ளது. 

Source link