தனுஷ் பேசும் அரசியல், பிரிக்கும் வாக்கு வங்கி: சென்னையில் முக்கியத்துவம் பெறும் மகளிர் அணி சந்திப்பு – politics, vote bank behind actor dhanush move with chennai omr college women functionaries meeting

சென்னை ஓ.எம்.ஆர் சாலையில் உள்ள தனியார் கல்லூரியில் நடிகர் தனுஷ் தனது நற்பணி மன்றத்தின் மகளிர் அணியை சந்தித்து பேசவுள்ளார். இது அரசியல் ரீதியாகவும் முக்கியத்துவம் பெற்றிருக்கிறது. விரைவில் ஓம் படத்தின் ஆடியோ லாஞ்ச் நிகழ்வு நடைபெறவுள்ள நிலையில், இன்றைய சந்திப்பில் என்ன பேசப் போகிறார் என்பது எதிர்பார்ப்பை எகிற வைத்துள்ளது.

நடிகரும், தவெக தலைவருமான விஜய் தமிழகத்தின் ஆட்சி கட்டிலில் அமர்ந்த விஷயம், திரைத்துறையில் பலருக்கும் புதிய நம்பிக்கையை விதைத்திருக்கிறது. இதனை நடிகர்கள் தனுஷ், சிவகார்த்திகேயன் உள்ளிட்டோரின் ரசிகர் மன்ற செயல்பாடுகளில் இருந்து புரிந்து கொள்ள முடிகிறது. கோவையில் நடிகை த்ரிஷா முதல்முறை நடத்திய ரோடு ஷோ மற்றொரு புறம் முக்கியத்துவம் பெற்றுள்ளது. இந்த சூழலில் சென்னை சோழிங்கநல்லூரில் தனியார் கல்லூரியில் நடைபெறும் சந்திப்பு நிகழ்ச்சியில், தனது நற்ன்பணி இயக்கத்தின் மகளிர் அணியினரை நடிகர் தனுஷ் சந்தித்து அவர்களுடன் புகைப்படம் எடுத்து கொள்கிறார்.

ஜேப்பியார் கல்லூரியில் தனுஷ் நற்பணி இயக்க நிகழ்ச்சி

சுமார் 3,000க்கும் மேற்பட்டோர் கலந்து கொள்கின்றனர். இதில் மகளிரணியை வலுப்படுத்துவது பற்றி ஆலோசனைகள் வழங்குவார் என்றும், புதிய உறுப்பினர்கள் சேர்க்கையை ஊக்குவிப்பார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிகழ்ச்சி நடைபெறும் ஜேப்பியார் கல்லூரியை அமைச்சர் மரிய வில்சன் நிர்வகித்து வருகிறார். இதிலிருந்து தொடங்கி தனுஷ் என்ன பேசப் போகிறார் என்பது வரை கண்டெண்ட்களுக்கு பஞ்சமின்றி வந்து கொண்டிருக்கின்றன. இதிலிருந்து ஒரு விஷயம் தெளிவாக தெரிகிறது. நடிகர் தனுஷ் அரசியலுக்கு வருவது உறுதி. இதை அவரது நெருங்கிய வட்டாரங்கள் உறுதிபடுத்தியுள்ளன.

நடிகர் தனுஷ் செய்த சம்பவம்!இது Next Level Plan கல்விக்காக தனுஷ் ?

அதிமுகவில் நோ, அமைச்சர் ஆதவ் அர்ஜுனா பதில்

வேறு கட்சியில் இணைவாரா, தனிக்கட்சி தொடங்குவாரா என்பது தான் கேள்வியாக இருக்கிறது. சமீபத்தில் கூட அதிமுகவில் நடிகர் தனுஷ் இணையவுள்ளதாக பேச்சுகள் அடிபட்டன. விவகாரம் இத்துடன் நிறக்வில்லை. அதிமுகவில் இணை செயலாளர் பதவி கேட்டார். அதற்கு எடப்பாடி பழனிசாமி மறுப்பு தெரிவித்துவிட்டார் என்கின்றனர். கடந்த சில தினங்களுக்கு முன்பு அமைச்சர் ஆதவ் அர்ஜுனா மறைமுகமாக நடிகர் தனுஷ் பற்றி பேசியிருந்தார். டெல்லி சென்று முக்கிய தலைவர்கள் உடன் அரசியல் ரீதியிலான சந்திப்புகள் நடத்தி வருவதாக தகவல்கள் கிடைத்துள்ளன. ஆனால் யார் வந்தாலும், யாருடன் வந்தாலும் ஒன்றும் நடக்காது என்றார்.

ஓம் படத்தின் இசை வெளியீட்டு விழா

இதன்மூலம் நடிகர் தனுஷின் நகர்வுகள் ஒவ்வொன்றையும் தவெக தரப்பு உன்னிப்பாக கவனித்து வருவதை பார்க்க முடிகிறது. இது தனுஷ் ஆதரவாளர்களுக்கும், தவெகவிற்கு எதிராக நிற்பவர்களுக்கும் ஒரு கண்டெண்ட்டாக மாறியுள்ளது. தனுஷ் அரசியலுக்கு வருவதாக சொல்லவில்லை. அதற்குள் ஏன் கதறுகிறீர்கள்? பயம் கண்களில் தெரிகிறது என பதிவிட்டு வருகின்றனர்.
மேலும் விரைவில் வெளியாகவுள்ள ஓம் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் தனுஷ் என்ன பேசப் போகிறார் என்பது தொடர்பாகவும் பேச்சுகள் அடிபடுகின்றன. இந்த ஆடியோ லாஞ்ச் உன்னுது தலைவா, அடிச்சு ஆடு? என்றெல்லாம் கண்டெண்ட்கள் சமூக வலைதளங்களில் திணறடித்து வருகின்றன. மறுபுறம் தனுஷ் நற்பணி மன்றம், கொடி, சின்னம் அறிமுகம் என அடுத்தடுத்து அதிரடியான விஷயங்களும் அரங்கேறியுள்ளன.

தனுஷ் பேசுப் போகும் அரசியல்

அரசியல் ரீதியாக ஏதாவது ஒரு சிக்னல் கொடுப்பாரா? குட்டி கதை சொல்லி ஆளுங்கட்சியான தவெகவை சீண்டுவாரா? தனது அரசியல் வருகை குறித்து விமர்சித்து வரும் அரசியல் தலைவர்களுக்கு பதிலடி கொடுப்பாரா? அரசியல் ரீதியாக எந்த பாதையை முன்னெடுப்பார்? ஆன்மீக அரசியலா, திராவிட அரசியலா? மாநில கட்சிகளின் அடிப்படையிலான கட்டமைப்பா, தேசிய கட்சிகளின் அடிப்படையிலான கட்டமைப்பா? ஆர்.எஸ்.எஸ், பாஜகவின் சித்தாந்தங்கள், கோட்பாடுகளை பிரதிபலிக்கும் வகையில் நடந்து கொள்வாரா, பெரியார் மண், சமூக நீதி, தமிழ் மொழி, மாநில உரிமைகள் சார்ந்து குரல் கொடுப்பாரா?

இடைத்தேர்தல் முடிவுகள் சொல்லும் சேதி

இவ்வாறு பல கேள்விகள் எழுகின்றன. ஏற்கனவே இருபெரும் திராவிட கட்சிகளுக்கு எதிரான வாக்குகளை தவெக பிரித்து விட்டது. அதில் ஒருபடி மேலே சென்று அதிமுகவின் அஸ்திவாரத்தை ஆட்டம் காணச் செய்யும் வகையில் அக்கட்சி எம்.எல்.ஏக்களை, நிர்வாகிகளை, தொண்டர்களை இழுத்து வருகின்றனர். இருப்பினும் நடந்து முடிந்த மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல் முடிவுகளில் திமுகவும், அதிமுகவும் தங்களது அடிப்படையான வாக்கு வங்கியை தக்க வைத்து கொண்டிருப்பதை பார்க்க முடிகிறது.

தனுஷ் யார் வாக்குகளை பிரிப்பார்?

இந்த சூழலில் தனுஷின் அரசியல் வருகை எந்த வாக்குகளை பிரிக்கும் என்ற மில்லியன் டாலர் கேள்வி எழுந்துள்ளது. தனுஷை பொறுத்தவரை 18 முதல் 30 வயதுக்கு உட்பட்ட இளைஞர்கள், பெண்கள் மத்தியில் ஒருவித ஈர்ப்பு இருக்கிறது. எனவே இந்த வாக்குகளில் ஒருபகுதி வரும். இதைத்தாண்டி நடுநிலை வாக்காளர்களின் கவனம் தனுஷ் பக்கம் திரும்பலாம். இந்த எல்லையை தாண்டி எந்த வாக்கு வங்கியை கவர்வார் என்பதை இனிவரும் காலங்களில் அவரது செயல்பாடுகள் தான் முடிவு

Source link