தமிகத்தில் விலைவாசி உயர்வு: கேள்வி எழுப்பினால் பொருளாதார ரீதியாகச் சிறுமைப்படுத்தும் அமைச்சர்கள்- டிடிவி தினகரன் – ttv dhinakaran urges for tamil nadu govt must take action to rice price hikes

தமிழ்நாட்டில் அத்தியாவசியத்திற்குத் தேவையான பொருட்களின் விலை நாளுக்கு நாள் உயர்ந்து வருவதாக பொதுமக்கள் தெரிவிக்கின்றனர். இதனால் தங்களது அன்றாட வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாகவும் அவர்கள் குற்றம் சாட்டி வருகின்றனர்.

தற்போது, அரிசி, பருப்பு, மற்றும் சமையலுக்குத் தேவையான எண்ணெய் உட்பட அனைத்து பொருட்களின் விலைவாசி உயர்வால் நடுத்தர மற்றும் ஏழை எளிய மக்கள் பெரும் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர். தினந்தோறும் ஏதாவது ஒரு பொருளின் விலை உயர்ந்து வருவதாகவும், தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழக அரசு தமிழ்நாட்டில் ஆட்சி அமைத்த பிறகே, இப்படி கடும் விலைவாசி உயர்வு ஏற்பட்டுள்ளதாகக் குற்றம் சாட்டுகின்றனர்.

மேலும் இதுகுறித்து கவலை இல்லாமல் முதல்வர், தேவையற்றதைச் செய்து வருவதாகவும் விமர்சித்து வருகின்றனர். இந்தச் சூழலில் அரிசி, பருப்பு விலை உயர்வால் மக்கள் கடுமையாகப் பாதிப்படைவதாகவும், இதனை அலட்சியம் காட்டாமல், அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் எனஅமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

டிடிவி தினகரன் அறிக்கை

அந்த அறிக்கையில் கூட்டுறவு அமுதம் கடைகளில் சன்னரக அரிசி விற்பனை, அமைச்சர்கள் ரீல்ஸ் எடுத்து முடித்ததும் தீர்ந்துவிட்டதாகப் பொதுமக்கள் புகார் எழுந்துள்ளதாக தெரிவித்துள்ள அவர், நகர்ப்புற, கிராமப்புற மக்களைச் சமூக அந்தஸ்தின் அடிப்படையில் பிரித்துப் பார்க்கும் அமைச்சர் வெங்கடராமின் அணுகுமுறை கடும் கண்டனத்திற்குரியது என தெரிவித்துள்ளார்.

அமைச்சருக்கு கண்டனம்

தமிழகத்தில் அரிசி, பருப்பு, சர்க்கரை, சமையல் எண்ணெய் உள்ளிட்ட மக்கள் அன்றாடம் பயன்படுத்தும் அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வால் ஏழை, எளிய மற்றும் நடுத்தரக் குடும்பங்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டிருக்கும் நிலையில், விலைவாசி உயர்வு குறித்து உணவுத்துறை அமைச்சர் ஒவ்வொரு நாளும் முன்னுக்குப் பின் முரணாகப் பேசிக்கொண்டிருப்பது தெரிவித்த அவர், அமைச்சருக்கு கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளார்.

ரீல்ஸ் எடுப்பதற்காக திட்டங்களா?

அரிசி விலை உயர்வைக் கட்டுப்படுத்தும் நோக்கில், கூட்டுறவு அமுதம் அங்காடிகளில் கிலோ ரூ.30-க்கு சன்னரக அரிசி விற்பனையை அமைச்சர்கள் தொடங்கி வைத்த ஒரு மணி நேரத்திலேயே அரிசி தீர்ந்துவிட்டதாகப் பொதுமக்கள் மத்தியில் எழுந்துள்ள புகார், முதலமைச்சரைப் போலவே அமைச்சர்களும் ரீல்ஸ் எடுப்பதற்காகவே திட்டங்களைத் தொடங்கி வைக்கிறார்களோ என்ற சந்தேகத்தை ஏற்படுத்துகிறது.

அமைச்சர் மீது டிடிவி வைத்த விமர்சனம்

அரிசி விலை உயரவே இல்லை; அதற்கு நானே சாட்சி முதலில் கூறியவர் உணவுத்துறை அமைச்சர் அடுத்த நாள் சென்னை போன்ற நகர்ப்புறங்களில் வாழும் மக்களையும் கிராமப்புற மக்களையும் உணவுமுறை மற்றும் சமூக அந்தஸ்தின் அடிப்படையில் ஒப்பிட்டுப் பிரித்துப் பார்க்கும் வகையில் பேசியுள்ளார். விலைவாசி உயர்வை முன்கூட்டியே கணித்து, உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்காமல் வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தார் கேள்வி எழுப்பத் தொடங்கியதும், முன்னுக்குப் பின் முரணான சர்ச்சைக்குரிய கருத்துகளைப் பேசி மக்களைத் திசைதிருப்ப முயன்றிருப்பது.

பொருளாதார ரீதியாகச் சிறுமைப்படுதல்?

தவெக ஆட்சி அமைந்த பிறகு நடைபெற்ற சட்டமன்றக் கூட்டத்தொடரில் பேசிய வருவாய்த்துறை அமைச்சர், தமிழகத்தில் வழங்கப்படும் ரேஷன் அரிசி ஆடு, மாடுகளுக்குப் பயன்படுத்தும் தரத்தில்தான் உள்ளது எனக் கூறியதும், தற்போது உணவுத்துறை அமைச்சர் தற்பெருமை பேசிக்கொண்டு, கிராமப்புற மக்கள் ரேஷன் அரிசியைத்தான் உண்கின்றனர் எனக் கூறுவதும், கிராமப்புற மக்களை ஏதோ வேற்றுக்கிரகவாசிகளைப் போலவும், அவர்களைப் பொருளாதார ரீதியாகச் சிறுமைப்படுத்தும் வகையிலும் அமைச்சர்கள் அணுகுகிறார்களோ என எண்ணத் தோன்றுகிறது.
விலைவாசி உயர்வைக் கட்டுப்படுத்தும் வகையில் கூட்டுறவு அங்காடிகளில் தொடங்கப்பட்டுள்ள கிலோ ரூ.30-க்கான சன்னரக அரிசியைப் போதுமான அளவில் இருப்பு வைத்து விற்பனை செய்திட வேண்டும் எனத் தவெக அரசை வலியுறுத்துகிறேன்.

விலைவாசி உயர்வு அமைச்சர் சொன்ன காரணம்

முன்னதாக அரிசி விலை உயரவே இல்லை எனவும், இது எதிர்க்கட்சிகளால் கட்டமைக்கப்படும் பொய்யான பிம்பம்தான் என உணவுத்துறை அமைச்சர் தெரிவித்திருக்கிறார். பின்னர் கிராமப்புற மக்கள் ரேஷன் அரிசியைத்தான் உண்கின்றனர் எனக் கூறி, நகர மக்கள் சமூக அந்தஸ்துக்காக விலை உயர்ந்த அரிசி உண்ணுகிறார்கள் என கூறினார். இவை அரசியல் வட்டாரத்தில் மட்டுமல்லது, மக்கள் மத்தியிலும் சர்ச்சையானது.

Source link