ரஞ்சிக் கோப்பை 2026 தொடரின், 2ஆவது லீக் போட்டியில் பஞ்சாப் மற்றும் சத்தீஸ்கர் அணிகள் மோதி வருகின்றன. இப்போட்டியில், பஞ்சாப் அணிக்காக ஷுப்மன் கில் விளையாடி வருகிறார். இவர், முதல் போட்டியிலேயே பிளேயிங் 11-ல் இருப்பார் எனக் கூறப்பட்டது. ஆனால், தனிப்பட்ட காரணங்களுக்கு, அவரால் முதல் போட்டியில் ஆட முடியவில்லை.
இந்நிலையில், 2ஆவது போட்டியில் ஷுப்மன் கில் விளையாடி வருகிறார். நியூசிலாந்து தொடருக்காக, அக்டோபர் 23 அல்லது 24ஆம் தேதி, அவர் நியூசிலாந்து புறப்பட உள்ள நிலையில், இந்த 2ஆவது டெஸ்ட் போட்டி, அவருக்கு நல்ல பயிற்சி களமாக இருக்க உள்ளது.
மேலும், இப்போட்டியில் அதிக ரன்களை குவித்து, நல்ல பார்முடன் நியூசிலாந்துக்கு செல்ல வேண்டிய கட்டாயமும் இருக்கிறது. இதனால், சத்தீஸ்கர் அணிக்கு எதிராக ஷுப்மன் கில், எப்படி செயல்படப் போகிறார் என்ற எதிர்பார்ப்பு இருந்தது. இந்நிலையில், முதல் இன்னிங்ஸில், 5 பந்துகளை மட்டும் எதிர்கொண்டு ஒரு ரன்னை அடித்து, இடது கை ஸ்பின்னர் அஜய் மந்தால் பந்தில் போல்ட் ஆகி ஷாக் கொடுத்துள்ளார்.
ஷுப்மன் கில், கடந்த இரண்டு டெஸ்ட் போட்டிகளிலும் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. இலங்கைக்கு எதிரான இந்த 2 டெஸ்ட் போட்டிகளில் 74 ரன்களைதான் அடித்தார். முதல் டெஸ்ட், முதல் இன்னிங்ஸில் 50 ரன்களை எடுத்திருந்தார். அடுத்து, இரண்டாவது டெஸ்டில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. இறுதியில், இப்போட்டியை இலங்கை அணி, போராடி டிரா செய்திருந்தது.
மிகமுக்கியமான தொடர்: அடுத்து, நியூசிலாந்துக்கு எதிரான 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் இருக்கிறது. இத்தொடர், இத்தொடர், நவம்பர் 19ஆம் தேதி துவங்கவுள்ளது. இத்தொடருக்காக, ஷுப்மன் கில், 4-5 நெட் பௌலர்களை தன்னுடன் அழைத்துச் செல்ல உள்ளார்.
இத்தொடர், இந்திய அணிக்கு, மிகமுக்கியமான தொடர் ஆகும். ஒருவேளை, இத்தொடரில் ஒரு போட்டியில், இந்திய அணி தோல்வியை சந்தித்தாலும், அடுத்து, ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான 5 டெஸ்ட் போட்டிகளிலும் இந்திய அணி வென்றால் மட்டுமே, உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பைனலுக்கு முன்னேற முடியும்.
இதனால், இந்த இரண்டு டெஸ்ட் போட்டிகளிலும் கேப்டன் ஷுப்மன் கில் ரன்களை குவிக்க வேண்டிய கட்டாயம் இருக்கிறது. ஒருவேளை, இத்தொடரில் கில் பெரிய ரன்களை அடிக்காமல், இந்திய அணி தோல்வியை சந்தித்தால், அது கில் கேப்டன்ஸி மீது கடும் விமர்சனத்தை ஏற்படுத்தும். இதனால், நியூசிலாந்துக்கு எதிரான 2 டெஸ்ட் போட்டிகளிலும் வெற்றியைப் பெற்றுக் கொடுக்க வேண்டிய கட்டாயத்தில் ஷுப்மன் கில் இருக்கிறார்.
நியூசிலாந்து டெஸ்ட் தொடருக்கான இந்திய அணி: ஷுப்மன் கில் (கேப்டன்), கே.எல்.ராகுல் (துணைக் கேப்டன்), யாஷஸ்வி ஜெய்ஷ்வால், தேவ்தத் படிக்கல், சாய் சுதர்ஷன், ரிஷப் பந்த் (பிட்னஸ் இருந்தால் மட்டுமே), துரூவ் ஜோரல், ரவீந்திர ஜடேஜா, நிதிஷ் ரெட்டி, வாஷிங்டன் சுந்தர், குல்தீப் யாதவ், ஜஸ்பரீத் பும்ரா, முகமது சிராஜ், ஆகாஷ் சீப், பிரசித் கிருஷ்ணா (பிட்னஸ் இருந்தால் மட்டுமே), அர்ஷுல் கம்போஜ்.
ஒருவேளை, பிரசித் கிருஷ்ணா முழு பிட்னஸை எட்டவில்லை என்றால், அவருக்கு மாற்றாக முகமது ஷமியை சேர்க்க அதிக வாய்ப்பு இருப்பதாக கருதப்படுகிறது.
