புதுடில்லி: காவிரியில் இருந்து தமிழகத்திற்கு வழங்க வேண்டிய நீர் பங்கீட்டை கொடுக்காமல் கர்நாடகா மறுத்து வருகிறது. இதனை எதிர்த்து தமிழக அரசு சார்பில் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. காவிரி மேலாண்மை ஆணையத்திடமும் முறையிடப்பட்டது.
காவிரி ஒழுங்காற்று குழு கூட்டம் டில்லியில் இன்று நடந்தது. அடுத்த 15 நாட்களுக்கு தமிழகத்திற்கு விநாடிக்கு 3,000 கனஅடி திறந்து விட கர்நாடகாவுக்கு உத்தரவிட காவிரி மேலாண்மை வாரியத்திற்கு பரிந்துரைக்கப்பட்டது.
இன்று பிற்பகல் 3 மணிக்கு நடக்கும் காவிரி மேலாண்மை ஆணையத்தின் 60வது கூட்டத்தில் உத்தரவு பிறப்பிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
