– நமது நிருபர்-
ஆர்எஸ்எஸ் இயக்கத்தின் நிறுவன நாளை முன்னிட்டு தமிழகத்தில், அந்த அமைப்பு ஆண்டுதோறும் பேரணி நடத்தும். இந்தாண்டு 128 இடங்களில் பேரணி நடத்த திட்டமிட்டது. ஆனால் தமிழக அரசு அனுமதி மறுத்தது. அந்த அமைப்பு ஐகோர்ட்டில் முறையிட்டு அனுமதி பெற்றது.
தமிழகத்தில் பல மாவட்டங்களில் இன்று பேரணி நடந்தது. இன்று நடக்காத இடங்களில் நவம்பர் 1ம் தேதி நடைபெறும்
சென்னையில், திருவொற்றியூர், கொளத்தூர், எழும்பூர், கொரட்டூர், ஐய்யப்பன்தாங்கல், மேடவாக்கம், குரோம்பேட்டையில் நடந்தது. இதன் பிறகு பொதுக்கூட்டமும் நடந்தது.
சேம் குகை மாரியயம்மன் கோவிலில் துவங்கிய பேரணி தாதகாப்பட்டி கேட் சக்தி காளியம்மன் கோவிலில் நிறைவு பெற்றது.தொடர்ந்து விஜயதசமி விழா பொதுக்கூட்டம் நடந்தது. ஆர்எஸ்எஸ் வட தமிழக அமைப்பாளர் பிரேஷாப குமார் உள்ளிட்டோர் பேசினர்.
திருப்பூர் மாவட்டத்தில் திருப்பூர் தெற்கு, திருமுருகன்பூண்டி, குன்னத்துார், வெள்ளகோவில், கொடுவாய் என 5 இடங்களில் ஆர்எஸ்எஸ் பேரணி நடந்தது. திருப்பூர் தெற்கில் பலவஞ்சிபாளையம் வேலவன் பள்ளி முன்பு மாலை 4:00 மணிக்கு ஊர்வலம் துவங்கியது. பின் வெள்ளியங்காடு நால் ரோட்டில் மாலை 5:00 மணிக்கு பொதுக்கூட்டம் நடந்தது.
நாமக்கல் மாவட்டத்தில், நாமக்கல் பூங்கா சாலையில் தொடங்கி பொய்யேரிக்கரை சாலை, பரமத்தி சாலை, பெரியப்பட்டி சாலை, சந்தைப்பேட்டைபுதுார், பழைய பஸ் ஸ்டாண்ட் செல்லும் சாலை வழியாக மீண்டும் பூங்கா சாலை வரை ஆர்எஸ்எஸ் பேரணி நடந்தது.
விழுப்புரம் ரயில் நிலையம் – திருச்சி நெடுஞ்சாலை தெய்வானை அம்மாள் மகளிர் கல்லூரி வரை ஆர்எஸ்எஸ் பேரணி தென்பாரத தலைவர் வன்னியராஜன் தலைமையில் நடந்தது.
ஆர்எஸ்எஸ் பேரணி நடந்த இடங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது.
