-நமது நிருபர்-
தென் கிழக்கு வங்கக்கடலில் நிலவிய வளி மண்டல சுழற்சி காற்றழுத்த தாழ்வு பகுதியாக உருவாகி இருக்கிறது; நாளை மறுநாள் புயலாக வலுவடைய வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தென் மாவட்டங்களான திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி மற்றும் நீலகிரியில் கனமழை கொட்டி தீர்த்தது. இன்று (அக்டோபர் 24) காலை 7:00 மணி வரை கடந்த 24 மணி நேரத்தில் நீலகிரி மாவட்டத்தில் வெவ்வேறு இடங்களில் பதிவான அதிகபட்ச மழை பொழிவு மில்லி மீட்டரில்…
* ஊட்டி- 40
* நடுவட்டம்- 46
* கிளன்மார்கன்- 30
* கல்லட்டி- 21
* பார்சன் வேலி- 42
* போர்த்திமுந்து- 27
* குந்தா- 74
* அவலாஞ்சி- 38
* எமரால்டு- 52
* கெத்தை- 84
* கிண்ணக்கொரை- 66
* அப்பர் பவானி- 28
* பாலகுலா- 67
* குன்னூர்- 81
* பர்லியார்- 250
* கேட்டி- 48
* குன்னூர் ரூரல்- 75
* ஹலிக்கல்- 52
* எடப்பள்ளி- 161
* கோத்தகிரி- 137
* கொடநாடு- 81
* கீழ் கோத்தகிரி- 200
* கூடலூர்- 35
* அப்பர் கூடலூர்- 33
* தேவாலா- 82
* செருமுள்ளி- 48
* பாடான்துறை- 47
* ஓவேலி- 68
* பந்தலூர்- 57
* சேரங்கோடு- 52
பள்ளிகளுக்கு விடுமுறை
நேற்று இரவு முதல் பெய்த மழையின் காரணமாக, ஊட்டி, குன்னூர், கோத்தகிரி, குந்தா, கூடலூர் மற்றும் பந்தலூர்ஆகிய வட்டத்திலுள்ள அனைத்து பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது. நேற்று இரவு மேட்டுப்பாளையம் குன்னூர் மலைப்பகுதியில் பெய்த கனமழையால் 10க்கு மேற்பட்ட இடங்களில் மண் சரிவு ஏற்பட்டுள்ளது.
மஞ்சள் அலெர்ட்
ஈரோடு, சேலம், நாமக்கல், கரூர், திருச்சி, தென்காசி, மதுரை, திண்டுக்கல், விருதுநகர், திருப்பூர், பெரம்பலுார், அரியலுார், திருவண்ணாமலை, வேலுார், ராணிப்பேட்டை, புதுக்கோட்டை , கடலுார், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், மயிலாடுதுறை, சிவகங்கை, சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், கிருஷ்ணகிரி, திருப்பத்துார், தர்மபுரி, ராமநாதபுரம், துாத்துக்குடி மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கன மழை பெய்ய வாய்ப்புள்ளது. தமிழகத்தின் பிற பகுதிகளில் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் இன்று மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.
