தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய இலங்கை, தமிழக கடலோர பகுதிகளில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி ஒன்று உருவானதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த வானிலை அமைப்பு மேற்கு மற்றும் வடமேற்கு திசையை நோக்கி மெதுவாக நகரக்கூடும் எனவும், இதன் காரணமாக கடலோர மண்டலங்கள் மற்றும் காவிரி டெல்டா மாவட்டங்களில் பரவலாக நல்ல மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கடல் அலைகள் சீற்றத்துடன் கொந்தளிப்பாக காணப்படக்கூடும் என்பதால் மீனவர்கள் ஆழ்கடல் பகுதிக்கு செல்ல வேண்டாம் எனவும் தீவிர எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதன் காரணமாக தமிழகத்தில் உள்ள 17 மாவட்டங்களில் இன்று மிக கனமழை கொட்டி தீர்க்கும் என எச்சரிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, தென்காசி, தேனி, ராமநாதபுரம், திண்டுக்கல், விருதுநகர், மதுரை, கோயம்புத்தூர், நீலகிரி, சிவகங்கை, புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் மற்றும் மயிலாடுதுறை ஆகிய பகுதிகளில் கனமழை வெளுத்து வாங்கும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.
தென் மாவட்டங்களில் விடிய விடிய பெய்து வரும் தொடர் மழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை ஆங்காங்கே பாதிக்கப்பட்டுள்ளது. மாணவர்களின் பாதுகாப்பு நலன் கருதி கடலூர், தருமபுரி, கன்னியாகுமரி, நெல்லை, தென்காசி, திருப்பத்தூர், திருவண்ணாமலை, விழுப்புரம், தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல் கன மழை எச்சரிக்கை காரணமாக, புதுச்சேரி மற்றும் காரைக்காலில் உள்ள அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள், தனியார் பள்ளிகலுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
Read More : எவ்வளவு நேரம் தூங்கினாலும் சோர்வா இருக்கீங்களா? காரணம் இது தான்..
