தொடர் கனமழை எதிரொலி; புதுச்சேரியில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு

தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவும் காற்றழுத்த தாழ்வுப் பகுதி காரணமாகத் தமிழகம் மற்றும் புதுச்சேரி ஆகிய பகுதிகளில் தொடர் கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக, தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. 

இந்நிலையில், தொடர்ந்து பெய்துவரும் கனமழை காரணமாக புதுச்சேரி மற்றும் காரைக்காலில் உள்ள பள்ளிகளுக்கும் இன்று (22-10-26) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. தனியார் பள்ளிகள் உட்பட அனைத்து பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து பெய்துவரும் கனமழையின் காரணமாக, மாணவர்களின் நலன் கருதி பள்ளிகளுக்கு விடுமுறை அறிவித்துள்ளார் கல்வித்துறை அமைச்சர் நமச்சிவாயம். 

ஏற்கனவே பருவ மழை தொடங்கியுள்ளதால் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக சில இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டு போக்குவரத்து பாதிப்பும் ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.