சென்னை; நவோதயா வித்யாலயா சமிதி ஆணையராக பணியாற்றி வரும் மூத்த ஐ.ஏ.எஸ்., அதிகாரியான ராஜேஷ் லக்கானியை, தமிழக அரசு பணிக்கு மாற்றம் செய்து, மத்திய பணியாளர் நலத் துறை அறிவித்துள்ளது.
மத்திய அரசின் பள்ளிக் கல்வி துறையின் கீழ் இயங்கும், நவோதயா வித்யாலயா சமிதியின் ஆணையராக பணியாற்றி வரும் மூத்த ஐ.ஏ.எஸ்., அதிகாரியான ராஜேஷ் லக்கானி, மீண்டும் தமிழக அரசு பணிக்கு மாற்றப்பட்டார்.
கடந்த 1992ம் ஆண்டு பிரிவு ஐ.ஏ.எஸ்., அதிகாரியான இவர், கடந்த பிப்ரவரியில், தமிழக அரசு பணியில் இருந்து, மத்திய அரசு பணிக்கு மாற்றப்பட்டார்.
