தமிழக சட்டப்பேரவை தலைவர் நாற்காலியில் சத்யபாமா: தங்கம் தென்னரசு பாராட்டு – thangam thennarasu wishes tiruppur north tvk mla sathyabama for sitting as tamil nadu assembly chairman

சட்டப்பேரவை தலைவர் நாற்காலியில் அமர்ந்துள்ள சத்யபாமா அவர்களுக்கு முன்னாள் அமைச்சர் தங்கம் தென்னரசு அவர்கள் பாராட்டு தெரிவித்தார். இதற்கு அவர் மனமார்ந்த நன்றியை பதிவு செய்தார். இந்த நிகழ்வு மிகுந்த கவனம் பெற்ற நிலையில், தமிழக அரசியலிலும் முக்கியத்துவம் பெறும் நிகழ்வாக மாறியுள்ளது.

திமுக முன்னாள் அமைச்சர் தங்கம் தென்னரசு இன்றைய தினம் சட்டப்பேரவையில் பேசும் போது, மாண்புமிகு பேரவை மாற்று தலைவர் அவர்களே, லேடி வெல்லிங்டன் அவர்கள் இந்த சட்டப்பேரவைக்கு வழங்க ஆசனத்தில் ஒரு பெண்மணி பேரவைத் தலைவராக அமர வேண்டும் என்பது நீண்ட காலமாக எல்லோரிடத்திலும் இருக்கும் எதிர்பார்ப்பு. இன்றைக்கு மாற்றுத் தலைவராக நீங்கள் அந்த இருக்கையில் அமர்ந்திருப்பதை பார்க்கும் போது உள்ளபடியே பேரவை உறுப்பினர்கள் அனைவரும் மகிழ்ச்சி அடைகிறோம். எங்கள் மகிழ்ச்சியையும், வாழ்த்துகளையும் தெரிவித்து கொள்கிறோம் என்றார்.

உடனே, மாண்புமிகு உறுப்பினர்கள் அவர்களுக்கு நன்றியை தெரிவித்துக் கொண்டார்.

Source link