விஜய் தலைமையிலான த.வெ.க அரசு, தமிழ்நாட்டில் நடந்து முடிந்த 17-வது சட்டசபைத் தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது. த.வெ.க-வின் முதல் சட்டசபைக் கூட்டம் ஜூன் 18-ஆம் தேதி ஆளுநர் அர்லேகர் உரையுடன் தொடங்கியது. ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதம் ஜூன் 19, 22 மற்றும் 23 ஆகிய தேதிகளில் நடந்து முடிந்தது.
வெஜ் சாப்டா தான் இந்த நாட்டுல உங்களுக்கு என்ட்ரி: வீகன் தலைநகரம்; இந்த பாஸ்தா டெஸ்டினேஷன் பற்றி தெரியுமா?
நிறைவு நாளில் முதலமைச்சர் விஜய் எதிர்க்கட்சிகளின் கேள்விகளுக்கு பதிலளித்தார். அதனைத் தொடர்ந்து, 4 நாட்கள் நடைபெற்ற சட்டசபை கூட்டத்தொடர் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டது. இந்நிலையில், வரும் ஆகஸ்ட் 5-ம் தேதி சட்டசபையில் தமிழக பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ளது. த.வெ.க அரசு தனது முதல் பட்ஜெட்டை தாக்கல் செய்ய உள்ள நிலையில் எதிர்பார்ப்புகள் எழுந்துள்ளது.
இதுதொடர்பாக வெளியான தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை செய்திக் குறிப்பில், “தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை கூட்டம் ஆகஸ்ட் மாதம் 5-ஆம் நாள் புதன்கிழமை காலை 10:00 மணிக்கு சென்னை தலைமை செயலகத்திலுள்ள சட்டமன்ற பேரவை மண்டபத்தில் கூட உள்ளது.
தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை விதி 181(1)-கீழ் 2026 – 2027 ஆம் ஆண்டிற்கான திருத்திய நிதிநிலை அறிக்கையினை 2026-ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 5-ஆம் நாள் புதன்கிழமை அன்று பேரவைக்கு அளிக்க வேண்டுமென்று ஆளுநர் நாள் குறித்துள்ளார். மேலும் அன்று காலை 10:00 மணிக்கு 2026 – 2027 ஆம் ஆண்டிற்கான திருத்திய நிதிநிலை அறிக்கை பேரவைக்கு அளிக்கபெறும்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
முக்கிய அறிவிப்பு வருமா?
த.வெ.க தேர்தல் அறிக்கையில் அளித்த வாக்குறுதிகளில் பல்வேறு அறிவிப்புகள் இதில் இடம்பெறும் என்று தெரிகிறது. குறிப்பாக, மகளிர் உரிமைத்தொகை ரூ.2,500 ஆக உயர்த்தப்படும் என்ற அறிவிப்பை பெண்கள் ஆர்வத்துடன் எதிர்நோக்கியுள்ளனர்.
