தமிழக பெண்களிடம் அதிகரித்து வரும் மார்பக கேன்சர்!

வா ழ்க்கை முறை மாற்றங்கள், மரபியல் காரணிகள், உணவு பழக்க வழக்கங்கள் உள்ளிட்ட பல காரணிகள் மார்பக கேன்சருக்கு காரணமாக அமைந்தாலும், இந்நோயின் பாதிப்பு அதிகரிப்பதற்கு முக்கிய காரணமாக இருப்பது, பாதிக்கப்பட்ட பெண்கள், சிகிச்சையைத் தொடங்குவதற்கு எடுத்துக் கொள்ளும் காலதாமதமே.

பல பெண்கள், ஆரம்ப கட்ட அறிகுறிகளை உணர்ந்த பிறகும், மருத்துவமனைக்கு வருவதை தள்ளிப் போடுவது சகஜமாக உள்ளது.

இத்தகைய தாமதத்திற்குப் பின், மார்பகங்களை முழுமையாக அகற்ற நேரிடுமோ என்ற பயம், ‘கீமோதெரபி’ சிகிச்சையின் போது, முடி உதிர்தல் உள்ளிட்ட பக்கவிளைவுகளை எப்படி எதிர்கொள்ளப் போகிறோம் என்ற தயக்கம், ‘ரேடியோதெரபி’ சிகிச்சை மீதான அச்சம் ஆகியவை சிகிச்சை எடுக்க விடாமல் தடுக்கின்றன.

இதனால், தமிழகத்தில் கடந்த சில ஆண்டுகளாக, மார்பக கேன்சரால் பாதிக்கப்பட்ட பெண்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. நோய் முற்றிய நிலையிலேயே பலரும் சிகிச்சைக்கு வருகின்றனர்.

இத்தகைய தயக்கம் அவசியமே இல்லை; காரணம், வியக்கத்தக்க வகையில், கேன்சர் சிகிச்சைக்கான மருத்துவ தொழில்நுட்பங்கள் தற்போது நடைமுறையில் உள்ளன.

குறிப்பாக, ‘ப்ரெஸ்ட் பிரிசர்வேஷன் சர்ஜரி’ எனப்படும் மார்பக பாதுகாப்பு அறுவை சிகிச்சை மூலம், முழு மார் பகத்தையும் அகற்றாமல், கேன்சர் கட்டியை மட்டும் துல்லியமாக அகற்றி உடலமைப்பை பாதுகாக்க முடிகிறது.

அதேபோல், வழக்க மான கீமோதெரபி மற்றும் பக்க விளைவுகளை பெருமளவு குறைக்கும் கேன்சர் செல்களை மட்-டும் துல்லியமாக அழிக்கும் ‘டார்கெட்டட் கீமோதெரபி’, கேன்சர் செல்களின் வளர்ச்சியைத் தடுக்கும் ஹார் மோன் தெரபி ஆகியவை, மிக துல்லியமான பலன்களை தருகின்றன.

மேலும், குறைந்த அளவிலான துல்லிய கதிர் வீச்சை மட்டுமே செலுத்தும் ‘லோ-டோஸ் ரேடியோ தெரபி’ முறை, ஆரோக்கியமான திசுக்களுக்கு எவ்வித பாதிப்பும் இன்றி கேன்சர் செல்களை அழிக்க பயன்படுகிறது.

மார்பக சுய பரி சோதனை செய்து கொள்வது, கேன்சரை அதன் ஆரம்ப அறி குறிகளின் போதே கண்டறிந்து, மருத்துவ ஆலோசனை செய்வது ஆகியவற்றை மேற் கொண்டால், கேன்சரில் இ ருந்து முழுமை ஆகக் குணமடைந்து இயல்பு வாழ்க்கைக்கு திரும்ப முடியும், இதை ஒவ்வொருவரும் கட்டாயம் உணர வேண்டிய உண்மை.

டாக்டர் திவ்யா நரசிம்மன், மகப்பேறு மருத்துவ ஆலோசகர், கவேரி மருத்துவமனை, சென்னை. 044 – 4000 6000 info@kauveryhospital.com

Source link