தமிழ்நாட்டை உலுக்கப்போகும் ‘சூப்பர் எல்-நினோ: அதிக பாதிப்புக்குள்ளாகும் 10 மாவட்டங்கள்- விவரம் – tamil nadu el nino affected districts details and impact

தமிழ்நாட்டில் எல்-நினோ காலநிலையால் பாதிக்கப்படும் மாவட்டங்கள் குறித்து இந்த பதிவில் விரிவாக பார்க்கலாம்.

தமிழ்நாடு, ஆந்திரா, தெலங்கானா, கர்நாடகா, ஒடிஷா, குஜராத், ராஜஸ்தான், பீகார், மத்திய பிரதேசம், மகாராஷ்டிரா, ஜார்க்கண்ட், உத்தர பிரதேசம் ஆகிய 12 மாநிலங்களில் உள்ள 326 மாவட்டங்களில் சூப்பர் எல் நினோ கடும் பாதிப்புகளை ஏற்படுத்தவுள்ளது

இந்தியாவில் 12 மாநிலங்களில் உள்ள 326 மாவட்டங்களில் சூப்பர் எல் நினோ

.இதை எதிர்கொள்ள மாவட்ட ஆட்சியர்கள், வேளாண் அறிவியல் மையங்கள் ஒருங்கிணைந்த ஆலோசனைக் கூட்டங்களை நடத்த வேண்டும் என்று மத்திய வேளாண் அமைச்சர் சிவராஜ் சிங் சௌஹான் தெரிவித்து இருந்தார். இந்த நிலையில் தமிழகத்தில் பாதிக்கப்படும் மாவட்டங்கள் குறித்து சற்று விரிவாக பார்க்கலாம்.

சத்தமில்லாமல் சம்பவம் செய்யும் தவெக….கோட்டை விடும் அதிமுக?

எல்-நினோ என்பது இயற்கை நிகழ்வு தான். பூமியின் வானிலை அமைப்பில் மிகவும் சக்தி வாய்ந்த வெப்ப நிலை ஏற்ற இறக்கமாக எல்-நினோவாக பார்க்கப்படுகிறது. கடைசியாக 2016 ஆம் ஆண்டு எல்-நினோஉருவானது.அதன் விளைவுகள் உலகம் முழுவதும் உணரப்பட்டது. இதுவரை இல்லாத அதிகபட்ச வெப்ப நிலை,காடுகளை அழித்தல், பனிப்பாறை உருகுதல் போன்றவற்றின் காரணமாக 2016ல் உருவானது. மேலும் பசுபிக் பெருங்கடலில் பூமத்திய ரேகையை ஒட்டி உள்ள பகுதிகளில் அதிகமான வெப்பம் ஏற்பட்டதால், அதனால் கடும் பாதிப்புகள் ஏற்பட்டது. அதன் தொடர்ச்சியாக தற்போது எல்-நினோவின் தாக்கம் தமிழகத்தில் ஏற்பட்டுள்ளது. 1950ல் இருந்து தமிழகத்தில் இதுவரை 11 முறை வறட்சி வந்துள்ளன். இதில் அதிகபட்சமாக 8 அல்லது 9 முறைகள் எல்-நினோ காலத்தில் தான் வறட்சி ஏற்பட்டுள்ளது. அந்த வரிசையில் தற்போது வரும் எல்-நினோ தாக்கம் 7முறையாக தமிழகத்தில் தென்பட்டு உள்ளது.

தமிழ்நாடு எல்-நினோ பாதிப்பு மாவட்டங்கள்

தமிழ்நாட்டில் வெயிலைப் பொறுத்தவரை மே மாதத்தில் இருக்கும் கத்திரி வெயில் என்பது ஜூலை வரை நீடித்துள்ளது. எனவே அடுத்த ஒரு சில வாரங்கள் வெப்பாலை அதிகமாக இருக்க வாய்ப்பு உள்ளது .இருப்பினும் எல்-நினோ ஏற்பட்டாலே தமிழகம் முழுவதும் ஒரே மாதிரியான தாக்கம் ஏற்படும் என்று கூற முடியாது. மாவட்டத்திற்கு மாவட்டம் அதன் தாக்கம் மாறுபடும் .தமிழகத்தில்
நீலகிரி ராமநாதபுரம் பெரம்பலூர் தருமபுரி அரியலூர் விருதுநகர் கிருஷ்ணகிரி வேலூர் நாமக்கல் திருச்சிஆகிய மாவட்டங்கள் எல்-நினோ பாதிப்பிற்கான அறிகுறிகளில் இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது தமிழகத்தில் எளினோவின் தாக்கம் பெரும்பாலும் தென்மேற்கு பருவ மழை மற்றும் வடகிழக்கு பருவமழையின் தன்மையை பொறுத்து அமையும்.

எல்-நினோ தாக்கம் எப்படி இருக்கும்?

கோடை காலத்தில் வெப்பநிலை இயல்பை விட அதிகரிக்கும் வாய்ப்பு உள்ளது. உள் மாவட்டங்களில் குடிநீர் பற்றாக்குறை ஏற்படும் அபாயம் அதிகரிக்கலாம்.நீர்த்தேக்கங்களில் நீர் வரத்து குறைந்தால் விவசாயம் பாதிக்கப்படலாம். சில ஆண்டுகளில் பலகடக்கு பருவமறை இயல்பை விட அதிகமாகும் சில ஆண்டுகளில் குறைவாகவும் அமையக்கூடும்.எல்-நினோ இருந்தாலே ஒரே மாதிரியான வழிமுறை இருக்கும் என்று கூற முடியாது. அதே நேரத்தில் எல்-நினோ நேரத்தில் ரெட் பெல்ட் என்பதையும் நாம் இங்கு கவனிக்க வேண்டும் . வெப்பம் மற்றும் காற்றின் ஈரப்பதம் கொண்டு இந்த ரெட் பெல்ட் பல வெப்பநிலை கணக்கிடப்படுகிறது 30டிகிரிக்கு மேல் சென்றால் மனிதர்களுக்கு சிக்கலை ஏற்படுத்தும். சென்னையில் தற்போது 32 டிகிரி செல்சியஸ் ஐ தாண்டி உள்ளது. 35 டிகிரிக்கு மேல் இந்த வெப்பநிலை செல்லும்போது மனிதர்களின் உடல் தன்னை குளிர்விக்கும் தன்மையை இழந்துவிடும். வறண்ட காற்றின் காரணமாக வியர்வை எதுவும் வராது. குளிர்சாதன வசதி இல்லாமல் மனிதர்களால் வாழவே முடியாத நிலை உருவாகும். தமிழ்நாட்டிலும் சரி இந்தியாவிலும் சரி, வெட்பாலையை எதிர்கொள்ள சரியான திட்டமிடல் இல்லை .பாகிஸ்தானில் 2015ல் கராச்சி வெப்ப அலையில் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்தனர். அதன் பின்னர் பாகிஸ்தான் வெளிப்படைந்து நடவடிக்கைகளை எடுத்தது தற்போது பாகிஸ்தானின் கராச்சியில் வெப்ப அலைகால் பாதிக்கப்பட்டு அவர்களுக்கு சிகிச்சை அளிக்க என்பதற்கு தனிவாடு உள்ளது தமிழ்நாட்டில் அப்படி ஏற்படுத்த வேண்டும் தமிழ்நாட்டில் எந்தெந்த பகுதிகள் வெட்பாலையால் பாதிக்கப்படும் என்ற குறிப்புகள் துல்லியமே நம்மிடம் இல்லை எனவே இது தொடர்பான ஆய்வுகள் தேவை
Source link