மதகில் தண்ணீர் திறக்க சென்ற விவசாயி நீரில் மூழ்கி உயி@ரிழப்பு

ஈரோடு மாவட்டம் கொடுமுடி அருகே உள்ள பனப்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் விவசாயி பழனிசாமி. இவருக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். இவருக்கு காலிங்கராயன் பாசனத்தில் விவசாய நிலம் உள்ளது.

இந்நிலையில் காலிங்கராயன் வாய்க்காலில் தற்போது தண்ணீர் திறக்கப்பட்டுள்ளதால் தனது நிலத்திற்கு தண்ணீர் பாய்ச்சுவதற்காக காலிங்கராயன் வாய்க்காலில் உள்ள மதகை திறக்க சென்றுள்ளார். காலிங்கராயன் வாய்க்காலுக்குள் உள்ள மதகு சாக்கு பையை வைத்து தண்ணீர் செல்லாதவாறு அடைக்கப்பட்டு இருந்தது. இதையடுத்து வாய்க்காலுக்குள் இறங்கிய விவசாயி பழனிச்சாமி மதகு அடைக்கப்பட்டுள்ள சாக்கை பிடுங்கி உள்ளார்.

அப்போது தண்ணீர் வெளியேறிய அழுத்தத்தில் விவசாயி பழனிசாமியையும் தண்ணீரில் மூழ்கி இழுத்துள்ளது. இதையடுத்து அங்குள்ள விவசாயிகள் நீரில் மூழ்கிய பழனிச்சாமியை மீட்க முயற்சித்துள்ளனர். ஆனால் வெளியே வர முடியாமல் விவசாயி பழனிச்சாமி நீரில் மூழ்கி இறந்து விட்டார்.

இதுகுறித்து கொடுமுடி காவல்துறையினருக்கு கொடுத்த தகவலின் பெயரில் சம்பவ இடத்திற்கு வந்த கொடுமுடி காவல்துறையினர் நீரில் மூழ்கி உடலை மீட்டு கொடுமுடி அரசு மருத்துவமனையில் பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். தனது விவசாய நிலத்திற்கு தண்ணீர் பாய்ச்ச வாய்க்காலுக்குள் இறங்கி மதகைத் திறக்க முயற்சித்த விவசாயி நீரில் மூழ்கி பலியான சம்பவம் அப்பகுதி விவசாயிகள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Source link