’தர்மேந்திர பிரதான் ராஜினாமா’; ஜென் ஸி-க்கு கிடைத்த வெற்றி

நீட் தேர்வு வினாத்தாள் கசிவு விவகாரம் நாடு முழுவதும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. நீட் முறைகேடு மற்றும் நிர்வாக சீர்கேடுகளை எதிர்த்து மாணவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த போராட்டத்தின் வாயிலாக நீட் தேர்வில் நடைபெற்ற முறைகேடுகளுக்குப் பொறுப்பேற்று கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டுமென இளைஞர்கள் கோரிக்கைகளை முன்வைத்து வருகின்றனர்.  

அதே நேரத்தில், இந்த போராட்டத்தை ஒடுக்க அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டதாகக் கூறப்படுகிறது. இருப்பினும், போராட்டம் நாளுக்கு நாள் வலுவடைந்து வருவதால் ஒன்றிய அரசு கடும் நெருக்கடிக்கு உள்ளானது. இந்த நிலையில் போராட்டக்காரர்களுடன் பேச்சுவார்த்தை நடத்த ஒன்றிய அரசு முன் வந்தது. இந்நிலையில், நேற்று நடந்த பேச்சு வார்த்தையில் அமைச்சர் தர்மேந்திர பிரதானின் ராஜினாமாவை வலியுறுத்தியிருந்தனர்.  

இதையடுத்து, ஒருவேளை தர்மேந்திர பிரதான் ராஜினாமா செய்யவில்லை எனில் நாடு தழுவிய போராட்டத்தை நடத்தப்போவதாகக் கரப்பான் பூச்சி கட்சியினர் அறிவித்திருந்தனர். இதையடுத்து, கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான், தனது ராஜினாமா கடிதத்தை பிரதமருக்கு அனுப்பியுள்ளதாகத் தெரிவித்துள்ளார். இதையடுத்து, போராட்ட களத்தில் உள்ள இளைஞர்கள் உற்சாகத்தை வெளிப்படுத்தியுள்ளனர்.  இது, போராட்டத்தை நடத்திய அனைத்து இளைஞர்களுக்குமான வெற்றி என்று பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.  

Source link