முதல்வர் விஜய் மற்றும் இயக்குநர் வினோத் கூட்டணியில் உருவாகியுள்ள ஜனநாயகன் திரைப்படம் உலகெங்கும் இன்று காலை திரையரங்குகளில் வெளியானது. முதல்வர் விஜய் -ன் கடைசி படம் இது என்பதால் ரசிகர்கள் தொடங்கி பிரபலங்கள் வரை அனைவரும் இப்படத்தை பார்க்க ஆர்வம் காட்டி வருகின்றனர்.
தூத்துக்குடியில் வெளியான ஜனநாயகன்
அந்த வகையில் தூத்துக்குடியில் மாநகரில் 4 திரையரங்குகளில் வெளியாகிறது. அதன் ஒரு பகுதியாக தூத்துக்குடி, கிளியோபட்ரா திரையரங்கில் திரைப்படம் வெளியானது. இந்த தியேட்டருக்கு மீன்வளத்துறை அமைச்சர் ஸ்ரீநாத் வருகை தந்தார்.. அப்போது அமைச்சர் ஸ்ரீநாத்தை ரசிகர்கள் ஆரவாரத்துடன் ஆட்டம் பாட்டத்துடன் மேல தாளங்களுடன் உற்சாகமாக வரவேற்றனர்..
அப்போது திரையரங்குவாயிலில்படம் வெளியாவதை முன்னிட்டு பிரம்மாண்ட கேக் தயார் செய்யப்பட்டிருந்தது. அதனை அமைச்சர் ஸ்ரீநாத் வெட்டினார். அதன் பின்பு தியேட்டரில் ரசிகர்களுடன் அமர்ந்து திரைப்படத்தை கண்டார். அப்போது ஸ்கிரீனில் முதல்வர் விஜயின் பழைய திரைப்படங்களின் பாடல்கள் ஒலிக்கப்பட்டது. தொடர்ந்து டைட்டில் கார்டும் போடப்பட்டது. அப்போது திடீரென எழுந்து நின்று அமைச்சர் ஸ்ரீநாத் தளபதி வாழ்க..! தளபதி வாழ்க..!என்று கோஷமிட்டார். அப்போது ரசிகர்களும் தளபதி வாழ்க என்று கோஷங்களை எழுப்பினார்கள்.
பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியாகும் ஜனநாயகன்
ஜனவரி மாதம் வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட ஜனநாயகன் திரைப்படம் தணிக்கை சான்று கிடைக்காததால் தள்ளிப்போனது. அதுமட்டுமின்றி தணிக்கை வாரியத்திற்கும் தயாரிப்பு நிறுவனத்திற்கும் இடையே உருவான சட்ட போராட்டம் படம் வெளியாகாதோ என்ற அச்சத்தையே ஏற்படுத்தியது.
இதற்கிடையில் 2026 சட்டமன்ற தேர்தலில் நடைபெற்றது அதில் தமிழகவெற்றி கழகம் வெற்றி பெற்று விஜய் முதல்வராக ஆட்சி பொறுப்பேற்றார். இந்த நிலையில் சில மாதங்களுக்கு முன்பு ஜனநாயகன் திரைப்படத்தின் முழு வடிவமும் பைட்ரேடாக இணையதளத்தில் வெளியானது.
இதனால் அதிர்ச்சி அடைந்த படக்குழு விஜய் ரசிகர்கள் யாரும் படத்தை இணையதளங்களில் டவுன்லோட் செய்து பார்க்க வேண்டாம் எனக் கோரிக்கை வைத்தனர்.
வலுக்கும் விமர்சனங்கள்
அதே சமயத்தில் மாநில முழுக்க நீட் தேர்வுக்கு எதிராக மாணவர் அமைப்பினர் போராட்டம் நடத்தி வருகின்றனர். இது போன்ற ரேட் கட்டான சூழலில் திரைப்படம் வெளியாகி உள்ளது.
இந்தி மொழியில் முதல்வர் விஜயின் Speech வைரல்! தேசிய அளவில் அதிகரிக்கும் ரசிகர்கள்!
போராட்டத்தில் ஈடுபட்டிருக்கும் மாணவர்களை சந்திக்காமல் அவர்களுக்கு எந்த ஆதாரமும் வழங்காமல் விஜயின் படத்தை போய் பார்ப்பது அமைச்சர்களின் கடமையா என சமூக வலைதளங்களில்கேள்வி எழுப்புகின்றனர்.
இப்படி பல்வேறு சட்ட போராட்டங்கள் இருந்த போதிலும் இன்றைய தினம் ஜனநாயகம் திரைப்படம் வெளியாகி விஜய் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்று இருக்கிறது.
