’மாணவர்களின் போராட்டத்திற்குத் தோள்கொடுப்போம்! நீட் வேண்டாம்!’

நீட் வினாத்தாள் கசிவு மற்றும் கல்வித்துறையில் முறைகேடுகளைக் கண்டித்து ’கரப்பன் பூச்சி மக்கள் கட்சி’யினர் கடந்த ஒரு மாதமாகப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். டெல்லியில் உள்ள ஜந்தர் மந்தரில் நடைபெற்று வரும் இந்த போராட்டத்தில் ஆயிரக்கணக்கான மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் கலந்து கொண்டுள்ளனர். கல்வித்துறையில் நிலவும் முறைகேடுகளுக்குப் பொறுப்பேற்று கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான்  பதவி விலக வேண்டுமென, அவர்கள் முக்கிய கோரிக்கையை முன் வைத்து வருகின்றனர். இந்த போராட்டம் கடந்த ஜூலை 20 முதல் நாடு முழுவதும் விரிவடைந்துள்ளது. கடந்த திங்கள் அன்று காவல்துறையினர் டெல்லியில் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த இளைஞர்கள் மற்றும் மாணவர்கள் மீது வன்முறைச் சம்பவங்களை நிகழ்த்தினார். இதில் பாதிக்கப்பட்ட 80 க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது .  

இந்நிலையில், கடந்த மூன்று நட்டிகளாகப் போராட்டக்காரர்கள் மீது அரசு ஒடுக்குமுறைகளை ஏவி வரும் நிலையில், இந்த போராட்டம் நாடு முழுவதும் பரவி உள்ளது. அந்த வகையில், பஞ்சாப், ஹரியானா, கேரளா , கர்நாடகா, மகாராஷ்டிரா , பீகார் மற்றும் மேற்கு வங்கம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் போராட்டங்கள் வெடித்துள்ளன. அதே போல, தமிழ் நாட்டில் சென்னை, திருச்சி, கோவை, திருவாரூர், கடலூர் மற்றும் நெல்லை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் போராட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன.   

அந்த வகையில், இன்று நீட் தேவை முழுவதுமாக ரத்து செய்யக்கோரியும், டெல்லியில் போராடும் மாணவர்கள் மற்றும் இளைஞர்களுக்கு ஆதரவாகவும் நீலம் பண்பாட்டு மையம் மற்றும் நீலம் மாணவர் இயக்கம் சார்பில் போராட்டம் நடத்தப்படுகிறது. ’கல்வி நீதிக்காக ஒன்றிணைவோம்’ என்ற தலைப்பில் ஒன்று கூடல் நிகழ்வு நடைபெறுகிறது. இதில் கலந்துகொள்ளக் கல்வி நீதியை விரும்பும் மாணவர்கள், கலைஞர்கள், எழுத்தாளர்கள், அரசியல் செயற்பாட்டாளர்கள் மற்றும் பொதுமக்கள்  என அனைவரைக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.  

இந்த ஒன்று கூடல் நிகழ்வு இன்று (23-07-26) மாலை 3 மணியளவில் சென்னை, எழும்பூரில் உள்ள ராஜரத்தினம் மைதானத்தில் நடைபெறுகிறது. இதில் அனைவரும் கலந்துகொண்டு ஆதரவு தருமாறு நீலம் பண்பாட்டு மையம் கேட்டுக்கொண்டுள்ளது.  

Source link