தளபதி விஜய் கடைசி என்ட்ரி; ஜன நாயகன் படம் பார்த்து தியேட்டரில் கதறி அழுத்த அமைச்சர் பர்வேஸ்

தமிழக முதல்வர் விஜயின் கடைசி படமான ஜன நாயகன் இன்று உலகம் முழுவதும் 30 நாடுகளில் வெளியாகியுள்ள நிலையில், தனது சொந்த ஊரான புதுக்கோட்டையில், படம் பார்த்த அமைச்சர் முகமது பர்வேஸ் தியேட்டரில் தேம்பி தேம்பி அழுத வீடியோ பதிவுகள் இணையத்தில் வைரலாகி வருகிறது. 

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக பல வெற்றிப்படங்களை கொடுத்த தளபதி விஜய், கடந்த 2024-ம் ஆண்டு, தமிழக வெற்றிக் கழகம் என்ற புதிய அரசியல் கட்சியை தொடங்கி, 2026 சட்டசபை தேர்தலில் தனி பெரும கட்சியாக 108 இடங்களில் வெற்றி பெற்று கூட்டணி கட்சியுடன் இணைந்து ஆட்சி அமைத்து முதல்வராக பதவியேற்றுள்ளார். ஆனால் அவர் நடிப்பில் கடைசி படம் என்று அறிவிக்கப்பட்ட ஜன நாயகன், 7 மாத காத்திருப்புக்கு இன்று வெளியாகியுள்ளது. 

எச்.வினோத் இயக்கத்தில் பூஜா ஹெக்டே, பாபி தியோல், மமிதா பைஜூ உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்த படம் தற்போது அனைத்து தடைகளையும் கடந்து உலகம் முழுவதும் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரிய வரவேற்பை பெற்று வருகிறது. தமிழகத்தில் முதல் காட்சி காலை 9 மணிக்கு திரையிடப்பட்ட நிலையில், கர்நாடகா மற்றும் கேரளா உள்ளிட்ட மாநிலங்களில் காலை 6 மணிக்கே முதல் காட்சி திரையிடப்பட்டது. மாநில எல்லைக்கு அருகில் இருக்கும் மக்கள் அண்டை மாநிலங்களில் படத்தை பார்த்துள்ளனர். 

மேலும் படம் பார்க்கும் ரசிகர்கள் பலரும் தங்களது சமூகவலைதளங்களில் படம் குறித்த விமர்சனங்களை பதிவிட்டு வருகின்றனர். அதே சமயம், விஜயின் கடைசி திரைப்படம் என்பதால் தியேட்டரை விட்டு வெளியே வரும் ரசிகர்கள் கண்ணீருடன் பேசி வரும் நிலையில், அமைச்சர் முகமது பர்வேஸ் தனது சொந்த ஊரான புதுக்கோட்டையில் படம் பார்த்தபோது, விஜயின் கடைசி படம் என்பதை தாங்கிக்கொள்ள முடியாமல் கதறி அழுத வீடியோ பதிவுகள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

தளபதி விஜயின் ரசிகர்களாக இருந்த பலரும் தற்போது தமிழகத்தில் எம்.எல்.ஏ மற்றும் அமைச்சர்களாக இருக்கும் நிலையில், ஜன நாயகன் படம் வெளியாகும் நாளில் பழைய விஜய் ரசிகர்களாக முதல் நாள் முதல் காட்சி பார்க்க ஆவலாக இருந்தனர். அதேபோல், பலரும் தங்களது சொந்த ஊரில் படம் பார்த்த நிலையில், அமைச்சர் பர்வேஸின் வீடியோ பல விஜய் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.

Source link