தளுக்கு புளுக்கு தக்காளி முதல் தளபதி ஆப்பிள் வரை: இன்ஸ்டாவை ஆக்கிரமித்த வெஜிடபிள்ஸ் – வைரல் பின்னணி – from thaluku puluku tomato to thalapathy apple how ai vegetable reels took over instagram

செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்தில் இதுவரை இல்லாத அளவுக்குப் பெரும் வளர்ச்சியை மனிதகுலம் சந்தித்து வருகிறது. அதே சமயத்தில், செயற்கை நுண்ணறிவு பொழுதுபோக்கு அம்சங்கள் மற்றும் தொழில்நுட்பத் துறையிலும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

சமீபகாலமாக ஏஐ தொழில்நுட்பத்தைப் பயன்படுத்திப் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் அதிக அளவில் உருவாக்கப்படுவதை நாம் பார்த்து வருகிறோம். அதுமட்டுமின்றி, தொலைக்காட்சி விளம்பரங்களில்கூட தற்போது ஏஐ தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி TV விளம்பரங்கள் உருவாக்கப்படுகின்றன. அந்த வகையில், சமீபகாலமாகக் காய்கறிகள் மற்றும் பழங்களை மையமாக வைத்து உருவாக்கப்படும் ஏஐ வீடியோக்கள் இன்ஸ்டாகிராமில் பார்வையாளர்களின் கவனத்தை அதிக அளவில் ஈர்த்து வருகின்றன.

தேங்காய் தேனாண்டாள், மாங்கா மஞ்சுளா, தளுக்கு புளுக்கு தக்காளி

சில தினங்களுக்கு முன்பு தேங்காய், மாங்காய், தக்காளி ஆகியவற்றுக்கு இடையே நிலவும் உறவுச் சிக்கலை மையமாக வைத்து வெளியான வீடியோ தற்போது இன்ஸ்டாகிராமில் பிரபலமாகி வருகிறது. தேங்காய் தேனாண்டாள், மாங்கா மஞ்சுளா, தளுக்கு புளுக்கு தக்காளி ஆகிய மூன்று கதாபாத்திரங்களின் உரையாடல்தான் தற்போது பலரது கவனத்தையும் ஈர்த்து வருகிறது.

அடுத்த எபிசோடில் என்ன நடக்கும்?

ஏழையாக வாழும் தளுக்கு புளுக்கு தக்காளியும், தேங்காய் தேனாண்டாளும் ஒரு நாள் மாங்கா மஞ்சுளாவைச் சந்திக்கின்றனர். அப்போது மாங்கா மஞ்சுளா வைரத்தைக் கொடுத்து தக்காளியை வாங்கிவிடுவது போன்ற காட்சி உருவாக்கப்பட்டிருக்கிறது. இதற்கு பிறகு இவர்கள் வாழ்க்கை என்ன ஆனது என பார்க்கவே பல பேர் காத்திருக்கின்றனர்.

இன்ஃப்ளூயன்சர்களை கவர்ந்த AI

ஏழையாக வாழும் தளுக்கு புளுக்கு தக்காளியும், தேங்காய் தேனாண்டாளும் ஒரு நாள் மாங்கா மஞ்சுளாவைச் சந்திக்கின்றனர். அப்போது மாங்கா மஞ்சுளா வைரத்தைக் கொடுத்து தக்காளியை வாங்கிவிடுவது போன்ற காட்சி உருவாக்கப்பட்டிருக்கிறது. இதற்கு பிறகு இவர்கள் வாழ்க்கை என்ன ஆனது என பார்க்கவே பல பேர் காத்திருக்கின்றனர். இர்களோடு தளபதி ஆப்பிள், மின்னல் மினிக்கி பெர்ரி என ஒரு கூட்டமே இணையத்தை ஆக்கிரமித்துள்ளது.

1 கிலோ ஹியூமன்ஸ்?

ஆடு, மாடு எல்லாம் மனிதரை போல வாழ்வதாகவும், மனிதர்கள் எல்லாம் விலங்குகளை போல வாழும் ரீல்ஸ்ஸும் இன்ஸ்டாவில் வைரல் தான். ஒரு வீடியோவில் ஆடு ஒன்று கடைக்கு சென்று 1 கிலோ ஹியூமன்ஸ் கொடுங்க என கேட்பதெல்லாம் அல்டிமேட்.

Source link