தவறான விளம்பரங்கள், விதி மீறல் குற்றச்சாட்டு; நெஸ்லே இந்தியா, வெல்நெஸ் நிறுவனத்திற்கு நோட்டீஸ்

-நமது நிருபர்-

நாடு முழுவதும், தரமற்ற, கலப்பட உணவு புகார்களுக்கு அதிரடி நடவடிக்கை எடுக்கப்படுகிறது. எளிதில் கெட்டுப்போகும் உணவு பொருட்களின் உற்பத்தியில் இருந்து, விநியோகம் வரையிலான நிலைகளில், பின்பற்ற வேண்டிய விதிமுறைகள் குறித்து, எப்.எஸ்.எஸ்.ஏ.ஐ., (மத்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம்) சார்பில், வணிகர்களுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. எப்.எஸ்.எஸ்.ஏ.ஐ., தீவிர கண்காணிப்பு நடத்தி வருகிறது.

தவறான விளம்பரங்கள் மற்றும் விதிகளை மீறியதாக புகார் வந்துள்ளதால், நெஸ்லே இந்தியா மற்றும் ஜைடஸ் வெல்நெஸ் நிறுவனங்களுக்கு எப்எஸ்எஸ்ஏஐ, விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.தங்கள் தயாரிப்புகள் குறித்து வெளியிட்டுள்ள விளம்பரங்களுக்கு உரிய அறிவியல் ஆதாரங்களைச் சமர்ப்பிக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் விளக்கம் அளிக்குமாறு நிறுவனங்களுக்கு எப்எஸ்எஸ்ஏஐ திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. சமீப காலங்களில் தவறான விளம்பரங்கள் உள்ளிட்டவை தொடர்பாக, உணவு ஒழுங்குமுறை ஆணையம் 150க்கும் மேற்பட்ட நிறுவனங்களுக்கு நோட்டீஸ் அனுப்பி உள்ளது.

Source link