தவெக அரசு சொந்தக் காலில் நிற்கவில்லை; இரவல் காலில்தான் நிற்கிறது- எடப்பாடி பழனிசாமி கடும் விமர்சனம் – edappadi palaniswami criticism tvk govt does not stand on its own feet it stands on borrowed legs

சாலையில் விளையாடிக் கொண்டிருக்கும் குழந்தைகளுக்கு மிட்டாய் கொடுத்து அள்ளிச் செல்வது போல, தவெக நமது சட்டமன்ற உறுப்பினர்களைத் தங்கள் பக்கம் இழுத்துக்கொண்டார்கள் என இடைத்தேர்தல் குறித்து எடப்பாடி பழனிசாமி விமர்ர்சித்துள்ளார்.திருச்சியில் திருமண நிகழ்ச்சியில் கலந்துக்கொண்ட அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பேசுகையில், சாலையில் விளையாடும் குழந்தைகளுக்கு மிட்டாய் கொடுத்து அழைத்துச் செல்வது போல, அதிமுக சார்பில் வெற்றி பெற்ற சட்டமன்ற உறுப்பினர்களைத் தன்பக்கம் இழுத்துக் கொண்டு தவேக அரசு ஆட்சி அமைத்துள்ளது. தவேக அரசு தனது சொந்தக் காலில் நிற்கவில்லை; இரவல் காலில்தான் நிற்கிறது.

மதுராந்தகம் மற்றும் தாராபுரம் ஆகிய இரு தொகுதிகளிலும் அதிமுக வேட்பாளர்களே வெற்றி பெற்றனர். ஆனால், சுயநலத்திற்காகக் குதிரை பேரத்தில் ஈடுபட்டு, ஆட்சி அதிகாரத்தைத் தக்கவைப்பதற்காக அந்த எம்.எல்.ஏ-க்களைத் தவேக தங்கள் பக்கம் இழுத்துக்கொண்டது. இதனாலேயே இங்கு இப்போது இடைத்தேர்தல் வந்துள்ளது.

அதிமுக தொண்டர்கள் மற்றும் கூட்டணி கட்சித் தலைவர்களின் தீவிர உழைப்பால் இந்த இரண்டு தொகுதிகளுக்கான இடைத்தேர்தலிலும் அதிமுக மீண்டும் அமோக வெற்றி பெறும்” என்று எடப்பாடி பழனிசாமி பேசியுள்ளார்

Source link