தவெக ஆட்சியில் மக்களுக்கு பரிசு விலைவாசி உயர்வு: இபிஎஸ் பேட்டி

மதுரை விமான நிலையத்தில் நிருபர்களுக்கு இபிஎஸ் அளித்த பேட்டி: தவெக ஆட்சிப் பொறுப்பேற்ற பின் கடுமையான மின் வெட்டு, ஆட்சி நிர்வாகத்தில் பல குளறுபடிகள் ஏற்பட்டுள்ளது. மின் வெட்டுப் பிரச்னையை சரிசெய்வதற்கான ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகள் எதையும் எடுக்கவில்லை. செயற்கையான மின் தடையை ஏற்படுத்தி கூடுதல் விலைக்கு மின் கொள்முதல் செய்கின்றனர். தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சந்தி சிரிக்கிறது.

தண்டனை பெற்ற கைதிகளை பாதுகாக்க முடியாத தவெக அரசு. ஜோசியர் கூறியதற்காக புழல் சிறைக்கு சென்று முதல்வர் விஜய் வந்தாரா? செஞ்சி சிறுமி எங்கே? காணாமல் போன குழந்தைகளை கூட கண்டுபிடிக்க முடியவில்லை. போதைப்பொருள் நடமாட்டம் அதிகரித்துள்ளது. தவெக ஆட்சியில் மக்களுக்கு பரிசு விலைவாசி உயர்வு. மாலை 6 மணிக்கு பிறகு முதல்வர் விஜய் வெளியே வரமாட்டார், மறுநாள் காலை 9 மணிக்கு தான் அதிகாரிகளை சந்திக்கிறார். இவ்வாறு இபிஎஸ் கூறினார்.

தினமலர் நேரலை; வீடியோ பாருங்கள்!

மதுரை விமான நிலையத்தில் அதிமுக பொதுச்செயலாளர் இபிஎஸ் செய்தியாளர் சந்திப்பு; தினமலர் வெப்சைட் மற்றும் யூடியூப் சேனலில் நேரலை ஒளிபரப்பு

Source link