“தவெக கூட்டணியில் சிபிஎம் சேர்வதாக இல்லை”

திருவாரூரில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் நிகழ்ச்சி ஒன்று இன்று (18-05-26) நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் அக்கட்சியின் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம் பங்கேற்றுப் பேசினார்.

அப்போது அவர், “இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பை உருவாக்குவதற்கு என்ன மாதிரியான கொள்கைகள் தவெக அரசு வைத்திருக்கிறது என வரவிருக்கும் நிதிநிலை அறிக்கையில் தெரியவரும். அதே மாதிரி விவசாய தொழிலாளர்களுக்கு என்ன மாதிரியான திட்டங்களை அறிவிக்கப் போகிறார்கள் அப்போது தான் தெரியும். எனவே நமக்கு ஏற்புடையதாக இருந்தால் அதை வரவேற்போம். நமக்கு ஏற்பு இல்லாத ஒரு திட்டங்களை, சட்டங்களை அவர் நிறைவேற்றினால் அதை எதிர்ப்பது தான் இந்த ஆட்சியில் நமது அணுகுமுறையாக இருக்கிறது.

அது போல் இந்த அரசுக்கு வெளியில் இருந்து ஆதரவு என்பது தொடரும். இந்த ஆட்சி கூட்டணியால் உருவாகவில்லை. அப்படி ஒரு பேச்சுக்கள் வருகிறது. நாம் அந்த கூட்டணியில் சேர்வதாகவும் இல்லை. இடதுசாரி அணி தான் நமது நிரந்தரமான அணி. இடதுசாரி ஒருங்கிணைப்புக் குழு என்பது நமது நிரந்தரமான வழி. அதை தான் நமது மாநிலக் குழு தீர்மானித்திருக்கிறது. அதற்கான நமது செயல்பாடுகள் இருக்கும். ஆட்சக்கான ஆதரவு எந்த அளவு என்பதை நாம் ஏற்கெனவே விளக்கி இருக்கிறோம்” என்று பேசினார். 

Source link