தவெக நிர்வாகி மீது பாலியல் புகார்.. வசனம் பேசுவதில் பலனில்லை: விஜய்யை கடுமையாக சாடிய நயினார் நாகேந்திரன் – nainar nagendran criticized cm vijay regarding tvk functionary vijay mohan issue

தவெக ஆட்சி அமைத்து இரண்டு மாதங்கள் கடந்துள்ள நிலையில், அக்கட்சியை சார்ந்த நிர்வாகிகள் தொடர்ச்சியாக சர்ச்சைகளில் சிக்கி வருகின்றனர். இது சம்பந்தமாக எதிர்க்கட்சிகள் தொடர்ச்சியாக கடுமையான விமர்சனங்களை முன்வைத்து கொண்டிருக்கின்றன. இதனிடையில் தவெகவின் ராணிப்பேட்டை மேற்கு மாவட்டச் செயலாளர் விஜய் மோகன் மீது,இளம்பெண் ஒருவர் புகார் அளித்திருப்பது பெரும் பரபரப்பினை கிளப்பியுள்ளது. இந்நிலையில் இவ்விவகாரம் தொடர்பாக நயினார் நாகேந்திரன் தனது சமூக வலைத்தளத்தில் கடும் விமர்சனங்களை முன்வைத்து பதிவு ஒன்றினை பகிர்ந்துள்ளார்.

தவெக ராணிப்பேட்டை மேற்கு மாவட்ட செயலாளரான விஜய் மோகன் மீது இளம்பெண் ஒருவர் பாலியல் மற்றும் மிரட்டல் மிரட்டல் புகார்கள் அளித்துள்ள சம்பவம் தமிழக அரசியல் களத்தில் பரபரப்பினை கிளப்பியுள்ளது. ஆற்காட்டை சார்ந்த திருமணமான இளம்பெண் ஒருவர், தவெகவில் இணைவதற்கு ராணிப்பேட்டை மேற்கு மாவட்ட செயலாளர் விஜய் மோகனை அணுகியுள்ளார். அவரிடம் நிர்வாண படங்கள் பெற்று பாலியல் தொந்தரவு கொடுத்ததாக காவல் நிலையத்தில் விஜய் மோகன் மீது இளம்பெண் புகார் அளித்துள்ளார்.

இது சம்பந்தமாக புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை எனவும் அப்பெண் பேட்டிகளில் பேசி வருகிறார். இதனையடுத்து தவெக ராணிப்பேட்டை மேற்கு மாவட்ட செயலாளர் விஜய் மோகன் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற குரல்கள் வலுத்துள்ளன. இந்நிலையில் பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், இவ்விவகாரம் தொடர்பாக தவெக மீது கடும் விமர்சனங்களை முன்வைத்துள்ளார்.

அதன்படி நயினார் நாகேந்திரன் பதிவில் கூறப்பட்டுள்ளதாவது, தனது கட்சி நிர்வாகிகளிடம் இருந்து பேங்கை பாதுகாப்பதற்கு முதல்வர் ஜோசப் விஜய் எந்த படையை அமைக்க போகிறார் என கேள்வி எழுப்பியுள்ளார். அதோடு கட்சியில் பதவி வாங்கித் தருவதாக கூறி தன்னை ஆபாசமாக வீடியோ எடுத்து மிரட்டுவதாகவும், தனக்கு கொலை மிரட்டல் விடுப்பதாகவும் இளம்பெண் ஒருவர் புகார் அளித்துள்ளார். தன்னுடைய பெண் குழந்தையையும் பாலியல் ரீதியாக விமர்சனம் செய்ததாக தவெகவின் ராணிப்பேட்டை மேற்கு மாவட்டச் செயலாளர் விஜய் மீது புகார்கள் அளிக்கப்பட்டு இருப்பது கடும் அதிர்ச்சி அளிக்கின்றன.

அது மட்டுமில்லாமல் பாதிக்கப்பட்ட பெண் பலமுறை புகார் அளித்தும் கூட, இதுவரை விஜய் மோகன் கைது செய்யப்படவில்லை என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளது. இது தமிழக காவல்துறையின் நேர்மையின் மீதும், அதனை தனது நேரடிக் கட்டுப்பாட்டில் இயக்கும் முதல்வருடைய நிர்வாக திறன் மீதும் கடுமையான சந்தேகத்தை எழுப்புகிறது என விமர்சனங்களை தன்னுடைய பதிவில் முன்வைத்துள்ளார் நயினார் நாகேந்திரன்.

எனவே தனது சொந்த கட்சிக்குள் இத்தனை காமுகர்களை பாதுகாத்து வைத்துக் கொண்டு, பக்கம் பக்கமாக பெண்களின் பாதுகாப்பினை பற்றி வசனம் பேசுவதில் யாருக்கும் எந்த பயனும் இல்லை என்பதை ஜோசப் விஜய் உணர வேண்டும். பாலியல் குற்றச்சாட்டுகளில் சிக்கியுள்ள தவெக நிர்வாகி விஜய் மோகன் மீது உடனடியாக சட்டம் மற்றும் கட்சி ரீதியாக நடவடிக்கைகள் எடுக்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும். இவ்வாறு தவெக அரசுக்கு கோரிக்கையும் நயினார் நாகேந்திரன் முன்வைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Source link