மெட்ரோ ரயிலில் பயணம் செய்த முதல்வர் விஜய்; ரயில் பணிகளை ஆய்வு!

தமிழக முதல்வராக பொறுப்பேற்றிருக்கும் ஜோசப் விஜய், நிர்வாகம் சார்ந்து பல்வேறு பகுதிகளுக்கு நேரடியாகச் சென்று ஆய்வுகளை மேற்கொண்டு வருகிறார். அந்த வகையில் இன்று (29-07-26) சென்னை தலைமைச் செயலகத்தில் இருந்து அரசினர் தோட்டம் மெட்ரோ ரயில் நிலையத்துக்கு சென்று மெட்ரோ ரயிலில் பயணம் செய்து ஆய்வு மேற்கொண்டார்.

நந்தனம் வரை மெட்ரோ ரயிலில் பயணிகளோடு பயணம் செய்த முதல்வர் விஜய், அங்கிருந்து சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் தலைமையகத்துக்குச் சென்று அரசு அதிகாரிகளுடன் பல்வேறு திட்டங்கள் குறித்து ஆலோசனை மேற்கொண்டார். குறிப்பாக சென்னையில் நடைபெற்று வரும் இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டப் பணிகள் குறித்து அதிகாரிகளிடம் ஆலோசனை மேற்கொண்டார்.

அதனை தொடர்ந்து அங்கிருந்து சாலை வழியாக கிண்டி கத்திப்பாரா மேம்பாலத்திற்குச் சென்ற முதல்வர் விஜய், அங்கு நடைபெற்றுக் கொண்டிருக்கும் மெட்ரோ பாலத்தை ஆய்வு செய்தார். மெட்ரோ வழித்தட வரைப்படத்தை பார்வையிட்ட அவர், அதிகாரிகளிடம் விவரங்களை கேட்டறிந்தார். கிண்டியில் இருந்து சாலை வழியாக போரூர் சென்ற முதல்வர் விஜய், மெட்ரோ ரயில் நிலையத்தில் ஆய்வு செய்தார். அதனை தொடர்ந்து அங்கிருந்து ஆளில்லா மெட்ரோ ரயிலில் பூவிருந்தமல்லி வரை பயணம் மேற்கொண்டார். இந்த நிகழ்வுகளின் போது முதல்வர் விஜய் செல்லும் வழியெல்லாம், பொதுமக்கள் ஏராளமானோர் கூடி அவரை உற்சாகமாக வரவேற்பு அளித்தனர். 

Source link