தாமிரபரணியில் தொடரும் கழிவுநீர் கலப்பு ஆய்வுகள் பல நடந்தும் தீர்வு இல்லை

திருநெல்வேலி: திருநெல்வேலி மாநகராட்சிக்கு உட்பட்ட, 20-க்கும் மேற்பட்ட இடங்களில் தாமிரபரணி ஆற்றில் கழிவுநீர் கலப்பதாக புகார் எழுந்துள்ளது.

சிந்துபூந்துறை உள்ளிட்ட இடங்களில் ஆற்றங்கரையில் அமைக்கப்பட்ட தொட்டிகளில் கழிவுநீர் தேங்கி, அவை ஆற்றில் கலப்பதாக சமூக ஆர்வலர்கள் குற்றஞ்சாட்டுகின்றனர். சிறு ஓடைகள் வழியாகவும் கழிவுநீர் நேரடியாக ஆற்றில் கலக்கிறது.

இதுகுறித்து, பல்வேறு ஆய்வுக் குழுவினரும், உயர் நீதிமன்ற நீதிபதிகளும் ஆய்வு செய்துள்ளனர். சமூக ஆர்வலர் எஸ்.பி. முத்துராமன், 2022-ல் திருநெல்வேலி மாஜிஸ்திரேட் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.

கழிவுநீர் கலப்பதால் குடிநீர் ஆதாரமான தாமிரபரணி மாசுபடுவதாகவும், சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் மனுவில் வலியுறுத்தினார். இந்த வழக்கை எதிர்த்து, மாநகராட்சி தரப்பில் மதுரை உயர் நீதிமன்ற கிளையில் வழக்கு தொடரப்பட்டது.

சுத்திகரிப்பு முறையில் கழிவுநீர் செலுத்தப்படுவதாக மாநகராட்சி தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது. இருப்பினும், கழிவுநீர் கலப்பைத் தடுக்க இதுவரை உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்பது பொதுமக்களின் வேதனையாக உள்ளது.

Source link