தமிழக வெற்றிக் கழகத்தின் மதம் சார்பற்ற சமூக நீதி வெற்றிக் கூட்டணியின் சார்பில், வரவிருக்கும் தாராபுரம் தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிட மீண்டும் வாய்ப்பளித்த தமிழக முதல்வர் ஜோசப் விஜய் அவர்களுக்குத் தனது மனமார்ந்த நன்றியினை வேட்பாளர் பி. சத்தியபாமா தெரிவித்துக் கொண்டார். இந்தத் தொகுதியில் வெற்றி பெற்று, அந்த வெற்றியை முதல்வரின் பாதங்களில் காணிக்கையாக்கப்போவதாக அவர் உறுதியளித்தார்.
தாராபுரம் இடைத்தேர்தல்
இது குறித்து தாராபுரம் தவெக வேட்பாளர் சத்யாபாமா செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில், தமிழக வெற்றிக் கழகம் கடந்த 100 ஆண்டு காலமாகச் சிறந்த ஆட்சியைச் செய்து வருவதாகவும், மக்கள் மத்தியில் மிக நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
பொதுமக்கள் இந்த ஆட்சியைத் தங்களுக்கெல்லாம் கிடைத்த ஒரு விடிவுகாலமாகவே எண்ணி வருகிறார்கள். மாவட்டச் செயலாளர் பொறுப்பேற்ற நாளிலிருந்து தினமும் ஏராளமான மக்கள் தானாகவே முன்வந்து த.வெ.க-வில் இணைய விருப்பம் தெரிவித்து வருகின்றனர்.
தலைமையின் நேர்மையும் நேர்த்தியும் மக்களிடையே மிகப்பெரிய நம்பிக்கையை உருவாக்கியுள்ளது.
அதிமுக ஆட்சிக் காலக் குற்றச்சாட்டு குறித்த கேள்விக்கு திமுக மற்றும் அதிமுக ஆட்சியின்போது 25 ஆண்டுகளுக்கும் மேலாக நிறைவேற்றப்படாத பட்டா கோரிக்கைகள் போன்ற அடிப்படைத் தேவைகளைக் சுட்டிக்காட்டிய அவர், மக்கள் தங்களுக்கு நேர்ந்த குறைகளைத் தீர்க்கும் ஒரே அரசாகத் த.வெ.க-வை நம்புவதாகத் தெரிவித்தார்.
முன்னாள் உறுப்பினர்களின் பதவி விலகலுக்கு காரணம் எடப்பாடி?
முன்னாள் அதிமுக சட்டமன்ற உறுப்பினர் பதவி விலகல்குறித்து எதிர்க்கட்சிகளின் விமர்சனம் குறித்த கேள்விக்கு எதிர்க்கட்சியினர் உண்மைக்கு மாறான கருத்துகளைப் பரப்புவதையே வாடிக்கையாகக் கொண்டுள்ளனர். திமுக கூட்டணியின் போக்கும், அதிமுக உட்கட்சிப் பூசல்களும் எடப்பாடி பழனிசாமியின் தன்னிச்சையான முடிவுகளுமே எனது விலகலுக்குக் காரணம். ஜெயலலிதா அம்மையாரின் காலத்திற்குப் பிறகு அதிமுகவால் எந்த வெற்றிகளையும் பெற முடியாமல் போனதும், மக்களின் நலனுக்காக உழைக்க வேண்டும் என்ற நோக்கத்திலுமே நான் த.வெ.க-வில் இணைந்தேன். எனக்கு மீண்டும் போட்டியிட வாய்ப்பளித்ததன் மூலமே இங்கு எந்தவிதக் குதிரை பேரமும் நடக்கவில்லை என்பது தெளிவாகியுள்ளது.
கடந்த தேர்தலில் 17,000 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதை விட, இந்த இடைத்தேர்தலில் த.வெ.க அரசு செய்துள்ள நல்லாட்சியின் காரணமாக அதைவிட அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவது உறுதியாக்கப்பட்டுள்ளது.
தொகுதி சார்ந்த திட்டங்கள்
உப்பார் அணை நீர் பிரச்சனை: உப்பார் அணை விவசாயிகளின் பாசனத் தேவையை நிறைவேற்ற உபரி நீரை வழங்குவதே சரியான வழிமுறை. அந்த உபரி நீரைப் பெற்றுத்தர உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அமராவதி – உப்பார் இணைப்பு வாய்க்கால் திட்டம்: வரும் காலங்களில் இது குறித்து ஆராய்ந்து தகுந்த முடிவுகள் எடுக்கப்படும். சட்டக்கல்லூரி கோரிக்கை: மக்களுக்கு அளித்த அனைத்து வாக்குறுதிகளையும் நிறைவேற்றும் வகையில் த.வெ.க அரசு உறுதியோடு செயல்படும். விளையாட்டு அரங்கம் மற்றும் புதிய பேருந்து நிலையத் திட்டங்கள் தாமதம்: அதிமுக/திமுக ஆட்சியாளர்கள் அரசு மீது குற்றம் சுமத்துவதற்காகவே இத்தகைய திட்டங்களைத் திட்டமிட்டுத் தடுத்து நிறுத்தி தாமதப்படுத்தி வருகின்றனர். உயர்தர அரசு தலைமை மருத்துவமனை வேறு பகுதிக்கு மாற்றம்: காங்கேயத்திற்கு மருத்துவமனை மாற்றப்பட்டதில் முன்னாள் அமைச்சர் கைவேலி தவறிழைத்து விட்டார். தாராபுரம் பகுதி மக்களுக்கு உயர்தர மருத்துவ வசதிகள் மீண்டும் கிடைக்கப் புதிய அரசிடம் பரிந்துரைத்துத் தீவிர நடவடிக்கை எடுக்கப்படும். மக்கள் நலனையே முதன்மையாகக் கொண்டு செயல்படும் தமிழக வெற்றிக் கழகம், தாராபுரம் தொகுதியில் மகத்தான வெற்றி பெறுவது உறுதி என சத்தியபாமா நம்பிக்கையுடன் தெரிவித்தார்.
Source link
