நாம் தமிழர் கட்சியின் மாநில மகளிர் பாசறை பொறுப்பாளர் கார்த்திகாவை அவரது கணவருடன் தாராபுரம் காவல்துறையினர் கோவையில் கைது செய்து தாராபுரத்திற்கு அழைத்துச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
திருப்பூர் மாவட்டம், தாராபுரம் சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலில் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளராகப் போட்டியிட்டவர் கார்த்திகா. தேர்தல் பிரசாரத்தின்போது பல்வேறு நடவடிக்கைகளில் ஈடுபட்டு கவனம் ஈர்த்தார். குறிப்பாக, காவல் நிலையத்தை முற்றுகையிட்டது மற்றும் முதலமைச்சர் செல்லும் வழியில் பிரசாரம் மேற்கொண்டது உள்ளிட்ட சம்பவங்கள் அப்போது பரபரப்பை ஏற்படுத்தின.
இந்நிலையில், கோவையில் உள்ள தனது இல்லத்தில் இருந்த கார்த்திகாவையும் அவரது கணவரையும் தாராபுரம் காவல்துறையினர் கைது செய்து, விசாரணைக்காக தாராபுரத்திற்கு அழைத்துச் சென்றுள்ளனர்.
