சென்னை: மதுராந்தகம், தாராபுரம் சட்டசபை தொகுதிகளின் வளர்ச்சிக்காகவும், மேம்பாட்டிற்காகவும் புதிய திட்டங்களை முதல்வர் விஜய் அறிவித்தார்.
மதுராந்தகம் தொகுதி
* செங்கல்பட்டு மாவட்டத்தின் அனைத்து கிராமங்களில் இருந்தும் கூடுதல் பஸ்கள் இயக்கப்படும்.
* பாலாற்றின் குறுக்கே படாளம், உதயம்பாக்கம் இடையே புதிய உயர்மட்ட தடுப்பணை கட்ட விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கப்படும்.
* மதுராந்தகம் தொகுதியில் தலா 30 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில், ஆறு கொள்முதல் நிலையங்கள் 1.80 கோடி ரூபாயில் அமைக்கப்படும்.
* அச்சரப்பாக்கத்தில் 20 கோடி ரூபாய் மதிப்பீட்டில் ஒரு புதிய அரசு மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி அமைக்கப்படும்.
* மதுராந்தகம் அரசு மருத்துவமனையில் 10 கோடி ரூபாயில், விபத்து மற்றும் அவசர கால சிகிச்சை பிரிவு அமைக்கப்படும்.
* மதுராந்தகம் ஏரியில் சுற்றுலா மற்றும் பொழுதுபோக்கு அம்சங்களின் கூடிய பூங்கா அமைக்கும் பணி மேற்கொள்ளப்படும்.
* நகராட்சியில் பணிபுரியும் பெண்களுக்கான ஒரு புதிய தங்கும் விடுதி அமைக்கப்படும்.
* படித்த இளைஞர்களுக்காக 3 கோடி ரூபாயில் அறிவுசார் மையம் அமைக்கப்படும்.
தாராபுரம் தொகுதி
* திருப்பூர் மாவட்டத்தில் காவிரியை ஆதாரமாகக் கொண்டு புதிய குடிநீர் திட்டம் ரூ 1,439 கோடியில் செயல்படுத்தப்படும்.
* தாராபுரம் தொகுதியில் வீடு இல்லாதவர்களுக்கு 2,700 இலவச வீட்டு மனை பட்டாக்கள் வழங்கப்படும்.
* பாசன கால்வாய்களில் மண் திட்டுகளை அகற்றி தூர்வாரும் 159 பணிகள் ரூ.10 கோடியில் மேற்கொள்ளப்படும்.
* ரூ.6 கோடியில் திடக்கழிவு மேலாண்மை பணிகள் மழை நீர் வடிகால் மேம்பாட்டு பணிகள் மேற்கொள்ளப்படும்.
* மூலனூரில் புதிய தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் நிலையம் அமைக்கப்படும்.
* தாராபுரம் நகராட்சியில் ரூ.6 கோடியில் மேல்நிலை நீர் தேக்க தொட்டி அமைக்கப்படும்; ரூ.40 லட்சத்தில் தெரு விளக்குகள் அமைக்கப்படும்.
* 271 கிலோ மீட்டர் நீளத்திற்கு வாய்க்கால், கால்வாய் தூர்வாரும் பணி விரைவில் மேற்கொள்ளப்படும்.
பிரத்யேக வீடியோ!
மதுராந்தகம், தாராபுரத்துக்கு புதிய திட்டங்கள்: முதல்வர் விஜய் அறிவிப்பு குறித்து தினமலர் வெப்சைட் மற்றும் யூடியூப் சேனலில் நேரலை ஒளிபரப்பு
