சென்னை: முதல்வர் விஜய் தலைமையில் இரண்டு வருடங்களுக்கு முன் 2024ம் ஆண்டு அக்டோபர் 27ம் தேதி விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாடு நடந்தது. இது குறித்து அமைச்சர் அருண்ராஜ் வெளியிட்ட அறிக்கை:
இன்றைய நாள் அக்டோபர் 27 தமிழகத்தின் அரசியல் வரலாற்றில் மட்டுமல்ல, இந்திய அரசியல் வரலாற்றிலும் மிக முக்கியமான நாள். ஒரு நடிகர் என்ன செய்து விடப் போகிறார்? அவரிடம் என்ன கொள்கை பிடிப்பு இருக்கப் போகிறது? என புற்றீசலாய் புறப்பட்ட விமர்சனங்களை எல்லாம் புயல் காற்றாய் ஊதித் தள்ளியது விக்கிரவாண்டி மாநாடும், மாநாட்டில் முதல்வர் விஜயின் முதல் உரையும்.
இது தாறுமாறாய் ஆடுகிற ஆட்டம் அல்ல; தத்துவத்துடன் ஆடுகிற ஆட்டம் என்று நமது தமிழக வெற்றிக்கழகத்தின் அரசியல் பாதையை மிக தெளிவாக வரையறுத்து வெளியிட்டார் தலைவர் விஜய். லட்சக்கணக்கான கட்சியினரும், மக்களும் தன்னெழுச்சியாக கலந்து கொண்ட முதல் மாநாட்டில் துவங்கிய நமது அரசியல் பயணம் வெற்றிச் சாலையில் என்றைக்கும் தொடர்ந்து பயணிக்கும்.
பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்ற தத்துவத்தின் வழியில் தமிழகத்துக்காக தொடர்ந்து உழைப்போம். கொள்கை தலைவர்களின் வழிகாட்டலில், முதல்வர் விஜய் தலைமையில், ஆட்சி மாற்றத்தையும், அரசியல் மாற்றத்தையும் ஏற்படுத்திய நமது வெற்றிப் பயணம் மக்களுக்காக என்றைக்கும் தொடரும். இவ்வாறு அமைச்சர் அருண்ராஜ் கூறியுள்ளார்.
