திடீரென தரையில் மோதி நொறுங்கிய விமானம்!. 2 பேர் பரிதாப பலி! மின்சாரமும் கட்!. அமெரிக்காவில் சோகம்! | Tamil News Online | Latest News In Tamil | Breaking News Tamil | Tamil News Live | தமிழ் நியூஸ்

அமெரிக்காவின் கலிஃபோர்னியா மாநிலத்தில் சிறிய ரக விமானம் ஒன்று விழுந்து விபத்துக்குள்ளானதில் 2 பேர் உயிரிழந்தனர். மேலும் 2 பேர் பலத்த காயமடைந்து உயிருக்குப் போராடி வருகின்றனர்.

கலிஃபோர்னியாவின் வடமேற்கு ஃப்ரெஸ்னோ பகுதியில் உள்ள ‘சியரா ஸ்கை பார்க்’ (Sierra Sky Park) விமான நிலையம் அருகே, பிளைத் அவென்யூ பகுதியில் சனிக்கிழமை பிற்பகலில் இந்த சோக சம்பவம் நடந்துள்ளது. கட்டுப்பாட்டை இழந்த அந்தச் சிறிய ரக விமானம் திடீரென தரையில் மோதி நொறுங்கியது.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த ஃப்ரெஸ்னோ தீயணைப்புத் துறை மற்றும் காவல்துறையினர் மீட்புப் பணிகளில் ஈடுபட்டனர். விபத்தில் இருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த நிலையில், உயிருக்குப் போராடிக்கொண்டிருந்த மேலும் இருவரை மீட்டு தீவிர சிகிச்சைக்காக அருகில் உள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். உயிரிழந்தவர்களின் விவரங்கள் உடனடியாக வெளியிடப்படவில்லை.

இந்த விமான விபத்தின் காரணமாக அப்பகுதியில் இருந்த மின்சாரக் கட்டமைப்புகள் பாதிக்கப்பட்டு, சுற்றுவட்டாரப் பகுதிகளில் சிறிது நேரம் மின் விநியோகம் தடைபட்டது. அதன்பின்னர் மின்சார வாரிய ஊழியர்கள் விரைந்து செயல்பட்டு மின் விநியோகத்தைச் சீரமைத்தனர்.

விமானம் எதனால் விபத்துக்குள்ளானது என்பது குறித்து உடனடியாகக் கண்டறியப்படவில்லை. தொழில் நுட்பக் கோளாறு காரணமா அல்லது வேறு ஏதேனும் காரணமா என்பது குறித்து அமெரிக்க விமானப் போக்குவரத்துத் துறை மற்றும் உள்ளூர் பாதுகாப்பு அமைப்புகள் இணைந்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றன.

Source link