திமுகவுக்கு அழைப்பு விடுத்த ஆதவ்? முக்கிய புள்ளிகள் வந்தால் தவெகவில் சேர்ப்போம் -அதிரடி பதில் – aadhav arjuna invites dmk leaders to tvk says party will welcome key figures who join

திமுகவில் இருந்து முக்கியப் புள்ளிகள் யாரேனும் வந்தால் தமிழக வெற்றிக் கழகத்தில் சேர்த்துக்கொள்வோம் என அமைச்சர் ஆதவ் அர்ஜுனா தெரிவித்துள்ளார். அண்ணா, பெரியார் ஆகியோரைத் தங்களது கொள்கைத் தலைவர்களாகக் கருதுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

திமுகவில் இருந்து முக்கியப் புள்ளிகள் யாரேனும் வந்தால் தமிழக வெற்றிக் கழகத்தில் சேர்த்துக்கொள்வீர்களா எனத் தனியார் ஊடகம் எழுப்பிய கேள்விக்கு, அமைச்சர் ஆதவ் அர்ஜுனா, “நிச்சயம் சேர்த்துக்கொள்வோம்” எனப் பதிலளித்தது அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.

தவெக vs திமுக: மாறும் தமிழக அரசியல் களம்

2026 சட்டமன்றத் தேர்தலுக்குப் பிறகு தமிழக அரசியல் களம் இதுவரை இல்லாத அளவில் முற்றிலும் மாறுபட்ட தன்மையைச் சந்தித்துள்ளது. அந்த வகையில், போட்டி என்பது தவெகவுக்கும் திமுகவுக்கும் இடையிலான போட்டியாக மாறிவிட்டது. ஏற்கெனவே நடைபெற்ற இடைத்தேர்தலில் திமுகவுக்கும் தவெகவுக்கும் இடையே கடும் போட்டி நிலவிய சூழலில், தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் களமிறக்கப்பட்ட மரகதம் குமரவேல் மற்றும் சத்தியபாமா ஆகியோர் வெற்றி பெற்றனர். திமுக இரண்டு தொகுதிகளிலுமே இரண்டாவது இடத்தைப் பெற்றது. இது மிகக் கடுமையான போட்டியாகப் பார்க்கப்பட்ட சூழலில், திமுகவும் தனது பலத்தை நிரூபித்தது.

தவெக மீது எழும் குற்றச்சாட்டுகள்

இதற்குப் பிறகு தமிழக வெற்றிக் கழகத்தின் மீது மக்கள் மத்தியில் அதிருப்தி அலைஉருவாகியிருப்பதாகக் கூறப்படுகிறது. அதற்கு மிக முக்கியமான காரணங்களில் சில, மின்தடை, மின்சாரக் கட்டண உயர்வு, கடுமையான விலைவாசி உயர்வு, சட்டம்-ஒழுங்கு பிரச்சினை எனப் பல்வேறு குற்றச்சாட்டுகளை மக்கள் ஆளுங்கட்சியின் மீது முன்வைத்து வருவதுதான். அதோடு மட்டுமல்லாமல், சமீபத்தில் 137 கிலோ மெத்தம்பெட்டமைனுடன் சிக்கிய தமிழக வெற்றிக் கழகத்தின் முன்னாள் நிர்வாகியால் தவெகவே ஆட்டம் கண்டிருப்பதாகவும் கூறப்படுகிறது.

திமுகவினரையும் வரவேற்போம்: ஆதவ் அர்ஜுனா

இப்படிப்பட்ட சூழலில்தான், தனியார் செய்தி ஊடகத்திற்குப் பேட்டியளித்த அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவிடம், இனிவரும் காலங்களில் இடைத்தேர்தல்கள் நடைபெற உள்ள நிலையில், திமுகவில் இருந்து முக்கியப் புள்ளிகள் யாரேனும் வந்தால் அவர்களைத் தவெகவில் சேர்த்துக்கொள்வீர்களா எனக் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்குப் பதிலளித்த ஆதவ் அர்ஜுனா, திராவிடக் கட்சிகளுக்கும் தங்களுக்கும் ஒரே கொள்கைதான் என்றும், அண்ணா மற்றும் பெரியாரைத் தங்களது கொள்கைத் தலைவர்களாகப் பார்ப்பதாகவும் தெரிவித்தார். எனவே, திமுகவில் இருந்து யார் வந்தாலும் வரவேற்போம் என அவர் பேசியுள்ளார்.

அதிமுகவைத் தொடர்ந்து திமுக?

ஏற்கெனவே அதிமுகவின் பல நிர்வாகிகளான சி. விஜயபாஸ்கர், எம்.ஆர். விஜயபாஸ்கர், இசக்கி சுப்பையா, மரகதம் குமரவேல், சத்தியபாமா உள்ளிட்ட அறிமுகமான முகங்கள் தவெகவில் இணைந்துள்ளனர். இவர்களைத் தவிர, வெளியில் அதிகம் அறியப்படாத பலரும் அதிமுகவில் இருந்து தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்திருப்பதாகக் கூறப்படுகிறது.

ழுந்துள்ள சூழலில், திமுகவில் இருந்து வருபவர்களையும் வரவேற்போம் என அமைச்சர் ஆதவ் அர்ஜுனா தெரிவித்திருப்பது அரசியல் வட்டாரத்தில் கவனம் பெற்றுள்ளது.

Source link