2026 தீபாவளி: பட்டாசு வெடிக்கும் டைமிங் இதுவா? பொதுமக்கள் கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டிய ரகசியம்!

தீபாவளி பண்டிகையின் போது சீன பட்டாசுகள் கள்ள சந்தையில் விற்கப்படுவதால், சிவகாசியில் தயாரிக்கப்படும் பட்டாசுகளின் விற்பனை அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளது. அதோடு ஆன்லைனில் தள்ளுபடி விலையில் பட்டாசு விற்பனை என்பதை நம்பி பொதுமக்கள் பலரும் மோசடி வலையில் சிக்கி பணத்தை இழக்கின்றனர். ஆகையால் ஆன்லைனில் வாங்கும் போது சற்று கவனமாக இருக்க வேண்டும் என அரசு கேட்டுக்கொண்டுள்ளது.

கடந்த ஆண்டைக் காட்டிலும் இந்த ஆண்டு பட்டாசுகளின் விலை கிட்டத்தட்ட 25 முதல் 30 சதவீதம் வரை விலை உயர்ந்துள்ளது. ஏற்கனவே விலைவாசி உயர்வால் நிதி நெருக்கடியில் இருக்கும் நடுத்தர குடும்பத்தினருக்கு பட்டாசு விலை உயர்வும் நெருக்கடியை கொடுத்துள்ளது.

பொதுவான விதிமுறைகள்:

* சுற்றுச்சூழல் மாசுபாட்டைக் குறைக்க அங்கீகரிக்கப்பட்ட பசுமைப் பட்டாசுகளை மட்டுமே விற்பனை செய்யவும், வெடிக்கவும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. பட்டாசு வாங்கும் போது அதில் QR குறியீடு இருப்பதை உறுதி செய்ய வேண்டியது அவசியம்.

* வேதிப் பொருட்கள் கலந்த பட்டாசுகள் மற்றும் அதிகளவில் சத்தம் மற்றும் புகையை எழுப்பும் பட்டாசுகளைத் தவிர்க்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

* பள்ளிகள், முதியோர் இல்லங்கள், வழிபாட்டுத் தலங்கள் மருத்துவமனைகள் மற்றும் நீதிமன்றங்களில் இருந்து 100 மீட்டர் சுற்றளவுக்குள் பட்டாசுகளை வெடிக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

* குடிசைப் பகுதிகள், எளிதில் தீப்பற்றக் கூடிய இடங்கள் மற்றும் பெட்ரோல் பங்க்குகளுக்கு அருகில் பட்டாசுகளை வெடிக்கக் கூடாது.

* திறந்தவெளி அல்லது குடியிருப்போர் சங்கங்கள் ஒதுக்கியுள்ள பொது இடங்களில் பட்டாசுகளை வெடிக்க அறிவுறுத்தப்படுகிறது.

அவசர உதவி எண்கள்:

பட்டாசு வெடிக்கும் போது எதிர்பாராத விதமாக ஏதேனும் அசம்பாவிதங்கள் ஏற்பட்டால் அவசர உதவிக்கு கீழ்க்கண்ட எண்களை அழைக்கவும். ​

தீயணைப்பு & மீட்புப்பணி – 101 ​

மருத்துவ அவசர ஊர்தி – 108 ​

பொது அவசர உதவி – 112

Source link