சட்டமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் தொடர்ந்து காரசாரமாக நடைபெற்று வந்த நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்பாக நிறைவடைந்தது. இந்த கூட்டத்தொடரில் திமுக, தவெக, அதிமுகவினர் இடையில் கடுமையான வாக்குவாதங்கள் நடந்தது.குறிப்பாக முதல்வர் பதிலுரைக்கு பின்பாக திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் தங்களுக்கு பேச அனுமதி அளிக்குமாறு அவையிலே தர்ணாவில் ஈடுபட்டனர். இந்நிலையில் எங்க கட்சிகாரங்களுக்கு பேச தெரியவில்லை என திமுகவின் முன்னாள் அமைச்சர் ஆர். காந்தி தெரிவித்துள்ளது பரபரப்பினை கிளப்பியுள்ளது.
திமுகவினர் கேள்வி
சட்டமன்ற கூட்டத்தொடர் கடந்த சில வாரங்களுக்கு மேலாக நடந்து வந்த நிலையில் பிரதான எதிர்க்கட்சியான திமுகவின் சட்டமன்ற உறுப்பினர்கள், தவெக அரசின் 100 நாட்கள் ஆட்சி குறித்து கடுமையான விமர்சனங்களை முன்வைத்தனர். குறிப்பாக சட்டம் ஒழுங்கு பிரச்சனைகள், விலைவாசி உயர்வு, அறிவிக்கப்படாத மின்வெட்டு மற்றும் பெண்கள் பாதுகாப்பு பற்றி அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பினார்கள்.
முன்னாள் அமைச்சர் ஆர். காந்தி
அதே நேரம் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் எழுப்பும் கேள்விகளுக்கு துறை ரீதியான அமைச்சர்கள் பதில் அளிப்பதில்லை. ராஜ்மோகன், ஆதவ் அர்ஜுனா, நிர்மல் குமார் போன்ற சில அமைச்சர்கள் மட்டுமே பதிலளிக்கின்றனர். அவர்களும் திமுகவினரை கோபப்படுத்தும் வகையிலே பேசுகிறார்கள். எதிர்க்கட்சி உறுப்பினர்களின் கேள்விகளுக்கு பதில் அளிப்பதில்லை என்ற விமர்சனங்கள் வைக்கப்பட்டது. இதனிடையில் சட்டமன்ற நிகழ்வுகள் குறித்து திமுகவின் முன்னாள் அமைச்சர் ஆர். காந்தி சில கருத்துக்களை தெரிவித்துள்ளார்.
கடந்த ஆட்சியிலே மாற்றம் கொண்டு வந்து விட்டோம்
அதாவது தனியார் நாளிதழ் ஒன்றுக்கு அளித்துள்ள பேட்டியில் பேசியுள்ள அவர், கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்ச 12 ஆண்டுகளுக்கு பிறகு வேட்டி, சேலை திட்டத்தில் மாற்றம் கொண்டு வந்து இருப்பதாக பொய் சொல்கிறார். கடந்த ஆட்சியிலே தரத்திலும் வடிவமைப்பிலும், தரத்திலும் மாற்றம் கொண்டு வந்து விட்டோம். அவர்கள் ஏதாவது உண்மையாக பேசுகிறார்களா? அப்படி ஒன்றையாவது சொல்ல முடியுமா? என கேள்வி எழுப்பியுள்ளார் ஆர். காந்தி.
எங்க ஆட்களுங்களுக்கு பேச தெரியவில்லை
தொடர்ந்து அவர், நான் ஒருத்தன் மட்டும் சட்டப்பேரவைக்குள் போய் இருந்தால் தெரிந்திருக்கும். பின்னிடுவேன்.யாரிடமும் போய் காக்கா பிடிக்க மாட்டேன் என ஆவேசமாக தெரிவித்துள்ளார். அதோடு எங்கள் ஆட்களுங்கெல்லாம் பேச தெரியவில்லை. நான் யாருக்கும் பயப்பட மாட்டேன். என் கட்சியாக இருந்தாலும் கூட. யாராக இருந்தாலும் நேருக்கு நேர் பேசி விடுவேன் என அந்த பேட்டியில் பேசியுள்ளார் ஆர். காந்தி.
திமுக MLA-கள் Vs வெங்கட்ராமன்! கோபப்பட்ட சபாநாயகர்!
திமுக சட்டமன்ற உறுப்பினர்களுக்கு சட்டமன்றத்தில் பேச தெரியவில்லை என அவர் தெரிவித்துள்ள கருத்து தற்போது கவனம் பெற்று கொண்டிருக்கிறது. அதே நேரம் திமுக எம்எல்ஏக்கள் சட்டமன்றத்தில் நன்றாகவே பெர்மார்ம் செய்தார்கள். தவெக அரசுக்கு எதிராக கடுமையான கேள்விகளையும் எழுப்பினார்கள் என இணைய திமுகவினர் கருத்துக்களை பகிர்ந்து கொண்டிருக்கின்றனர்.
ராணிப்பேட்டை தொகுதி
ராணிப்பேட்டை தொகுதியில் பலமுறை போட்டியிட்டு சட்டமன்ற உறுப்பினர் ஆனவர் ஆர். காந்தி. கடந்த 2021 சட்டமன்ற தேர்தலில் அவர் வெற்றி பெற்று அமைச்சராக பொறுப்பு வகித்தார். இதனிடையில் இந்த தேர்தலில் வயது மூப்பின் காரணமாக அவறுக்கு பதிலாக மகன் வினோத் காந்திக்கு சீட் வழங்கியது திமுக. இதற்கு ஆர். காந்தி எதிர்ப்பு தெரிவித்து, தனக்கு சீட் வழங்க வேண்டுமென வலியுறுத்தினார். இதனையடுத்து அவருக்கு திமுக சீட் வழங்கிய நிலையில், சட்டமன்ற தேர்தலில் ஆர். காந்தி தோல்வியை தழுவியது குறிப்பிடத்தக்கது.
Source link
