திமுக உறுப்பினர்கள் கூண்டோடு வெளியேற்றம்: உடல்நிலை சரியில்லாத போதும்.. உருக்கமாக பேசிய சபாநாயகர் – speaker prabhakar statement dmk mlas expelled misa sarkaria commission controversy

அமளியில் ஈடுபட்டவர்களை வெளியேற்றியதில் எந்த வருத்தமும் இல்லை என சபாநாயகர் பிரபாகர் விளக்கம் அளித்துள்ளார். இது குறித்து விரிவாக பார்க்கலாம்.

சட்டபேரவையில் நேற்று முதல்வர் காவல்துறை மானியக் கோரிக்கை மீதான விவாததற்கு பதிலுரை வழங்கினார். அப்போது, சர்க்காரியா கமிஷன் மற்றும் மிசா குறித்து முன்னாள் முதல்வர் மு.க.ஸ்டாலின் குறித்து அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன்வைத்தார்.இது தமிழக அரசியல் களத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

மிசா குறித்து பேசிய முதல்வர் விஜய்

இதனைத் தொடர்ந்து, சட்டபேரவையில் கடைசிலான இன்று 8 துறையின் மானியக்கோரிக்கை மீதான விவாதம் நடைபெற உள்ளது. இந்த நிலையில், மிசா மற்றும் சர்க்காரியா கமிஷன் குறித்து முதலமைச்சர் விஜய் பேசியதை சட்டப்பேரவை அவை குறிப்பில் இருந்து நீக்க வேண்டும் என திமுகவினர் வலியுறுத்தினர். இதற்கு பதில் அளித்து பேசிய சபாநாயகர், மிசா மற்றும் சர்க்காரியா என நேற்றுமுதல்வர் விஜய்பேசிய எதையும் அவைக்குறிப்பில் இருந்து நீக்க தேவையில்லை . முதல்வரின் பேச்சில் எந்த குறையும் இல்லை.

அவை குறிப்பில் இருந்து நீக்க வேண்டும் என திமுகவினர் கோரிக்கை

அதை நீக்க வேண்டிய அவசியம் இல்லை என்று கூறினார்.இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்த திமுகவினர் தங்களது இருக்கையை விட்டு அவையின் மையத்திற்கு வந்து கூச்சலிட்டனர்.தொடர்ந்து அமளியில் ஈடுப்பட்ட திமுக எம்.எல்.ஏக்களை பேரவையில் எழுந்து நின்று சபாநாயகர் எச்சரிக்கை விடுத்தார்.இதனைத் தொடந்து சபாநாயகரின் இருக்கையை சூழ்ந்து திமுகவினர் கோஷமிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

திமுக எம்.எல்.ஏ.க்கள் அவையிலிருந்து வெளியேற்றம்

உடனே சபாநாயகர்,நான் கொடுத்த தீர்ப்பை மாற்றிக்கொள்ள முடியாது. எல்லோரும் அமைதியாகப் போய் இடத்தில் உட்காருங்கள்.. 1 நிமிடம் அவகாசம் தருகிறேன்.. எல்லாரும் போய் இருக்கையில் உட்காருங்க.. கட்சி சண்டை போல இங்கே போடாதீர்கள்.. அவையின் மாண்பை எப்படி குறைக்க வேண்டும் என பயிற்சி எடுத்து கொண்டு திமுகவினர் வந்துள்ளீர்களா?பேரவையை நடத்த விடாமல் தடை செய்யும் நோக்கத்துடன் திமுகவினர் வருகை தந்துள்ளீர்களா? தன்னை சூழ்ந்து முழக்கமிட்ட திமுகவினருக்கு சபாநாயகர் எச்சரிக்கை விடுத்தார்.

சபாநாயகர் பிரபாகர் விளக்கம்

இருப்பினும் தொடர் அமளியில் திமுகவினர் ஈடுப்பட்டதால் சபாநாயகர் சொன்னதன் பேரில் திமுகவினர் ஒட்டுமொத்தமாக அவை காவலர்களால் வெளியேற்றப்பட்டனர்.பின்னர் சட்டபேரவையில் பேசிய சபாநாயகர், எனக்கு உடல்நிலை சரியில்லாத போதும், மருத்துவமனையில் சிகிச்சை எடுத்த பின்பும் பேரவை ஆரோக்கியமாக நடக்க வேண்டும் என வந்திருக்கிறேன்.மக்களின் நலனுக்கான பேரவையை நடத்த விடாமல் செய்வதை ஏற்க முடியாது .அமளியில் ஈடுபட்டவர்களை வெளியேற்றியதில் எந்த வருத்தமும் இல்லை என்று தெரிவித்துள்ளார்.

பொதுமக்கள் கோரிக்கை

சட்டமன்ற கூட்டத்தொடர் கடந்த ஆகஸ்ட் 5 ஆம் தேதி தொடங்கியது. முதல்வராக விஜய் பொறுப்பேற்றுள்ள நிலையில், என்ன மாதிரியாக திட்டங்கள் பொதுமக்களுக்கு கொண்டுவரப்பட உள்ளனர் என்பது குறித்த எதிர்ப்பார்ப்பு நிலவியது.விவசாயக்கடன் பாதி தள்ளுபடி, பள்ளி மாணவர்களுக்கு மிதிவண்டி, தாய்மாமன் தங்க மோத்திட்டம் உள்ளிட்டவை தவெக தேர்தல் அறிக்கையில் கொடுக்கப்பட்டவையை திட்டங்களாக அறிவிக்கப்பட்டது. இதற்கு ஒரு தரப்பினர் வரவேற்பு , மற்றும் ஒரு தரப்பினர் தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில், சட்டபேரவையில் அரசியல் ரீதியாக தங்களை மாறி மாறி குற்றச்சாட்டுகளை முன் வைக்கின்றனர். இதனால், நேரம் வீணாக்கப்படுகிறது. இதனால், மக்கள் நலன் தொடர்பாக விவாதங்கள் நடைபெறுவதில் சிக்கல் ஏற்படுகிறது. எனவே இனிவரும் காலங்களில் எம்.எல்.ஏக்கள் அனைவரும் திட்டங்கள் ரீதியாக பேச வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.

Source link