திரிபுரா டிஜிபி அனுராக் தன்கர் தற்கொலை

நமது நிருபர்

திரிபுராவில் டிஜிபி அனுராக் தன்கர், துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டார்.

திரிபுராவில் டிஜிபி அனுராக் தன்கர் தன்னை தானே துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டார். அவரது உடல் தற்போது அகர்தலா மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது. டிஜிபி அலுவலகத்துக்கு திரிபுரா முதல்வர் மாணிக் சாஹா விரைந்தார்.

பணி நேரத்தில் டிஜிபி தற்கொலை செய்துகொண்டது தொடர்பாக விரிவான விசாரணைக்கு அம்மாநில அரசு உத்தரவு பிறப்பித்தது. அவருடைய தற்கொலைக்கு காரணம் என்ன? விரைவில் விரிவான விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

அனுராக் தன்கர் 1994ம் ஆண்டு பேட்ஜைச் சேர்ந்த மூத்த ஐபிஎஸ் அதிகாரி ஆவார். பல்வேறு முக்கிய சிபிஐ வழக்குகளை கையாண்டுள்ள இவர், கடந்த 2025 மே மாதம் மாநிலத்தின் டிஜிபியாக பொறுப்பேற்றார். தற்போது தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை கிளப்பியது.

Source link